உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 88 மணி நேர ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை

88 மணி நேர ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை

புதுடில்லி: ''88 மணி நேர ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான்'' என பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி பேசியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை என்பது 88 மணி நேரத்தில் முடிவடைந்த ஒரு டிரெய்லர் மட்டுமே, எதிர்காலத்தில் எந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பாகிஸ்தான் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அண்டை நாடுகளுடன் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் அதற்கு கற்றுக்கொடுப்போம்.பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. இந்தியா எப்போதும் தண்ணீரும், ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்றும், பயங்கரவாதங்களை எதிர்த்தும் வருகிறது. எப்போது எல்லாம் ஒரு நடவடிக்கை எடுக்கிறோமோ அப்போது எல்லாம் அதில் இருந்த நாங்கள் நிறைய கற்றுக்கொள்கிறோம். இந்த முறை நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று, எந்த முடிவையும் எடுக்க நமக்கு குறைவான நேரம் மட்டுமே உள்ளது. சரியான நேரத்தில் முடிவு எடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 61 சதவீதம் பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள். எந்தவொரு போருக்கும் இந்தியா பதிலளிக்கத் தயாராக உள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும், ஆதரவளிப்பவர்களுக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும். இவ்வாறு ராணுவ தளபதி உபேந்திர திவேதி பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை