உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் ரயிலில் அடிபட்டு 9 பசுக்கள் பரிதாப பலி

கேரளாவில் ரயிலில் அடிபட்டு 9 பசுக்கள் பரிதாப பலி

பாலக்காடு:பாலக்காடு அருகே, தண்டவாளத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த ஒன்பது பசுக்கள் ரயிலிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தன.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா நவோதயா பள்ளி அருகே, ரயில் தண்டவாளத்தை, ஒன்பது பசுக்கள் நேற்று அதிகாலை 12:00 மணியளவில் கடக்க முயன்றன.அப்போது, அவ்வழியாக சென்ற ஹிமசாகர், கொச்சுவேலி- - யஸ்வந்த்பூர், சென்னை- - திருவனந்தபுரம் ஆகிய மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள், பசுக்கள் மீது மோதியது.இதில், அனைத்து பசுக்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. அவற்றின் உடல் பாகங்கள் தண்டவாள பகுதியில் சிதறி கிடந்தன. தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் உதவியுடன் பசுக்களின் உடல்களை அகற்றினர்.இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், உள்ளூர் மக்கள் சிலர் தங்களின் பசுக்களை, மேய்ச்சலுக்காக ரயில் தண்டவாளம் அருகே விட்டுச்சென்றதும், அவை அனைத்தும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.இதுபோல், கடந்த மாதம் 13ம் தேதி மீங்கரை அணை அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற, 13 பசுக்கள் ரயில் மோதி பலியானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ