உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நற்பெயரை கெடுக்க சில பொய்கள் போதும் பொய் பாலியல் வழக்கில் நீதிபதி கருத்து

நற்பெயரை கெடுக்க சில பொய்கள் போதும் பொய் பாலியல் வழக்கில் நீதிபதி கருத்து

புதுடில்லி,:பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு கூறப்பட்ட நபரை விடுதலை செய்த நீதிமன்றம், பொய் சாட்சியுடன் புகார் செய்த பெண் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், 'ஒருவர் தன் வாழ்நாளில் உருவாக்கி வைத்திருக்கும் நற்பெயரை, சில பொய்கள் அழித்து விடும்' என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, ஹோட்டல் அறையில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு பெண் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒரு நபரை கைது செய்தனர்.இந்த வழக்கு டில்லி பெருநகர கூடுதல் அமர்வு நீதிபதி அனுஜ் அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'புகார் கூறியுள்ள பெண், இதே போல ஆறு பேர் மீது பாலியல் புகார் செய்துள்ளார். அவருக்கு இதே வழக்கம் என போலீசாரே தெரிவித்துள்ளனர்'என வாதிட்டார்.இதையடுத்து, நீதிபதி அனுஜ் அகர்வால் பிறப்பித்த உத்தரவு:புகார் செய்துள்ள பெண், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து பார்த்ததில், குற்றம் சாட்டப்பட்டவரை வழக்கில் சிக்க வைக்க, அந்தப் பெண் ஏற்கனவே திட்டமிட்டது தெளிவாகிறது. மேலும், சாட்சி 1 மற்றும் 2 ஆகியோரும் இதை நிரூபிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுகிறார். ஒருவர் நற்பெயரை உருவாக்க வாழ்நாள் முழுதும் தேவைப்படும். ஆனால், அதை அழிக்க சில பொய்கள் போதுமானது. பொய் குற்றம் சாட்டிய பெண் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை