உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமையல் ருசிக்க சில டிப்ஸ்...

சமையல் ருசிக்க சில டிப்ஸ்...

வெந்தய குழம்பு செய்யும்போது, நல்லெண்ணெயில் தாளித்து, அதிலேயே சாம்பார் பொடி, காய்கறி ஆகியவற்றையும் வதக்கி, பிறகு புளி சேர்த்து, குழம்பு செய்தால் வாசனை பிரமாதமாக வரும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் சங்கு பூ டீ குடிக்கலாம்.புளி போட்டு வைக்கும் ஜாடியில் சிறிதளவு உப்பு சேர்த்தால், பூச்சி வராது.தேநீரில் ஒரு சில துளி பன்னீரை விட்டால், புதுவிதமான சுவையுடன் தேநீர் ரெடி.வாழை இலையில் தினமும் சாப்பாடு சாப்பிட்டால் சீக்கிரம் தலைமுடி நரைக்காது.குழம்பில் காரம் அதிகமாகி விட்டால் கடலை மாவு, அரிசி மாவு கரைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றி, காரத்தை குறைக்கலாம்.தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ததும், வெயிலில் காய வைப்பது மிகவும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ