வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது
இந்த சமயம் பார்த்து கனியக்கா மோடி குரூப்பில் போய் மாட்டி கிச்சு. மோடியை திட்டுற வாய்ப்பு போச்சே. அடடா..
புதுடில்லி: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p1ujl6w8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது மேற்கு வங்காளத்தின் வடமேற்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய வங்கடல் கடற்கரையில் இருந்து சாகர் தீவுக்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ, திகாவிற்கு தென்கிழக்கே 130 கிமீ, பாரதீப்பிற்கு கிழக்கு - வடகிழக்கே 190 கிமீ மற்றும் கெபுபரா (வங்காளதேசம்) க்கு மேற்கு-தென்மேற்கே 210 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும். இன்று (மே 29) பிற்பகலுக்குள் மேற்கு வங்கம் - வங்காளதேச கடற்கரைகளை சாகர் தீவுக்கும் கேபுபாரா (வங்காளதேசம்)க்கும் இடையில் கடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது
இந்த சமயம் பார்த்து கனியக்கா மோடி குரூப்பில் போய் மாட்டி கிச்சு. மோடியை திட்டுற வாய்ப்பு போச்சே. அடடா..