உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் 2 பெண்களை காதலித்து ஒரே மேடையில் மணமுடித்த காதலன்

தெலுங்கானாவில் 2 பெண்களை காதலித்து ஒரே மேடையில் மணமுடித்த காதலன்

ஹைதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர், இரண்டு பெண்களை காதலித்து, இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த சம்பவம் நடந்துஉள்ளது.'90ஸ் கிட்' எனப்படும் 1990களில் பிறந்தவர்கள் ஒரு திருமணம் செய்யவே திண்டாடும் நிலையில், தெலுங்கானா மாநிலம் கொமுரம் பீம் அசிபாபாத் மாவட்டம், கும்னுார் கிராமத்தைச் சேர்ந்த சூர்யதேவ், 27, இரு பெண்களை காதலித்துள்ளார்.தன் காதலிகளான, லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி ஆகிய இருவரிடமும் இதை பற்றி கூறி, ஒரே சமயத்தில் இருவரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதற்கு அந்த பெண்களும் சம்மதித்தனர். ஆனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் மூவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்வதில் உறுதியாக இருப்பதை அறிந்து சம்மதம் தெரிவித்தனர்.இதையடுத்து மணப்பெண்கள் இருவருடன் நிற்கும் புகைப்படத்துடன் சூர்யதேவ் திருமணம் அழைப்பிதழ் அச்சிட்டு திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார். சமீபத்தில் இரண்டு காதலிகளுக்கும் ஒரே மேடையில் வைத்து சூர்யதேவ் தாலி கட்டினார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vijay D Ratnam
ஏப் 11, 2025 14:38

சூப்பரப்பு, ஒரு வருஷம் குஜாலா போவும். என்ஜாய், என்ஜாய். ரெண்டும் குட்டி போட்ட பிறகு ஒனக்கு இருக்கு நைனா ஆப்பு. அவனவன் ஒன்ன வச்சிக்கிட்டே நாய்படாதபாடு படுகிறான். ஒனக்கு எல்லாமே டபுளு மாமே.


வாய்மையே வெல்லும்
ஏப் 02, 2025 08:00

நம்மூரு ஓட்டை படகு மூணு நாலு அஞ்சுன்னு வைத்ததே மறந்து போச்சா கோபால் ?


C G MAGESH
மார் 31, 2025 11:57

இன்னும் வாழ்கிறார்


darani
மார் 30, 2025 20:02

this is illegal even though accepted both girls and their relative. polygamy is illegal in India


S Ramkumar
மார் 31, 2025 09:38

இதில் ஒரு மனைவி வழக்கு தொடுக்க வேண்டும். கல்யாணம் பதிவு செய்ய படவேண்டும். இது மாதிரி கல்யாணங்கள் பதிவு செய்ய முடியாது. இரு மனைவி வெளியே தெரிந்து பலர் உள்ளார்கள். இவர்களை எல்லாம் சட்டம் என்ன தாண்டித்தா விட்டது.


முக்கிய வீடியோ