உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு பிளேட் உணவு ரூ.5,000: மஹா., அரசு மகா விருந்து

ஒரு பிளேட் உணவு ரூ.5,000: மஹா., அரசு மகா விருந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில், பார்லி., மதிப்பீட்டு குழுவின் பவள விழா கூட்டத்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, வெள்ளித்தட்டில் சாப்பாடு பரிமாறப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மும்பையில் சட்டசபை கட்டடத்தில் உள்ள விதான் பவனில், சமீபத்தில், பார்லி., மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா துவக்கி வைத்தார். நாடு முழுதுமிருந்து 600 விருந்தினர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், பார்லி., மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, வெள்ளித்தட்டில் உணவுகள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஒருவருக்கு தலா, 5,000 ரூபாய் மதிப்பிலான உணவுகள் வெள்ளித்தட்டில் பரிமாறப்பட்டதாகவும், ஒரு வெள்ளித்தட்டு தலா, 550 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து, மஹாராஷ்டிரா சட்டசபை காங்., தலைவர் விஜய் வடெட்டிவார் நேற்று கூறுகையில், ''மாநில அரசு ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் போது, விருந்தினர்களுக்கு வெள்ளித்தட்டில் உணவு வழங்க வேண்டிய அவசியம் என்ன? ''விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை; தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கவில்லை; பல நலத்திட்டங்களுக்கான நிதி இல்லை. நிலைமை இப்படி இருக்கையில், ஒரு பிளேட் உணவுக்கு, 5,000 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்த ஆடம்பரம் தேவையா?'' என்றார்.சமூக ஆர்வலர் கும்பர் கூறுகையில், ''600 விருந்தினர்களுக்கு செலவிடப்பட்ட பணம், மொத்தம் 27 லட்சம் ரூபாய். சிக்கனத்தை போதிக்கும் மதிப்பீட்டு குழுவுக்கு, மக்களின் பணத்தை இப்படி வீணடிக்கலாமா?'' என, கேள்வி எழுப்பினார்.இதற்கிடையே, 'விருந்தினர்களுக்கு வெள்ளி முலாம் பூசப்பட்ட தட்டில் உணவு பரிமாறப்பட்டது. ஒரு பிளேட் உணவு 5,000 ரூபாய் அல்ல; அதை விடக் குறைவு' என, அரசு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜூன் 27, 2025 08:52

4000 கோடி 95% மழை நீர் வடிகால் பணிகள் முடிந்தது இதைவிடக் எதுவும் மிஞ்ச முடியாது


அப்பாவி
ஜூன் 27, 2025 08:19

ஜனகராஜ் டயலாக் மாதிரி... எல்லாரும் வந்து வயிறு நிரம்ப சாப்புடுங்கோ. நம்ம அரசுப் பணம். மக்கள் பணம்.


vbs manian
ஜூன் 27, 2025 08:18

எந்த கட்சியாய் இருந்தால் என்ன அரசியல்வாதிகள் திருந்த மாட்டார்கள்.


Natarajan Ramanathan
ஜூன் 27, 2025 05:29

ஒரு பிளேட் உணவு 5,000 ரூபாய் அல்ல அதை விடக் குறைவு... ரூபாய் 4,995 மட்டுமே என, அரசு அதிகாரிகள் கூறினர்.


Kasimani Baskaran
ஜூன் 27, 2025 04:03

புரளியை கிளப்பி விட்டு யாரோ நாடகம் ஆகியிருக்கிறார்கள். சேனை கட்சி வெளியுறவுக்கொள்கையில் அறிக்கை விடுவது போல இதுவும் ஒரு கவனத்தை திசை திருப்பும் செயல் போல தெரிகிறது...


A viswanathan
ஜூன் 28, 2025 02:04

இது மக்களின் வரி பணம் என்பதை நினைவில் கொண்டால் சரி.


சமீபத்திய செய்தி