உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை

கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா தொடங்கி உள்ளது.ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம், இந்தியாவில் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாகனம் 600 கி.மீ., தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளையும் கண்காணிக்கும். அதேபோல் 400 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை இடைமறித்து அழிக்கவும் முடியும். சிந்தூர் நடவடிக்கையின் போது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, தளத்தின் கூடுதல் பிரிவுகளுக்கான கோரிக்கையுடன் இந்தியா, ரஷ்யாவை முறையாக அணுகியுள்ளதாக உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:மேற்கு எல்லையைத் தாண்டி வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இந்த அமைப்புகள் அதிக துல்லியம் மற்றும் செயல்திறனைக் காட்டின.இந்த செயல்திறனால் மிகுந்த பயனை பெற்ற இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மேலும் விநியோகங்களை நாடுவதன் மூலம் அதன் வான் பாதுகாப்பு திறன்களை விரிவுபடுத்த விரும்புகிறது. ரஷ்யா விரைவில் இந்த கோரிக்கையை அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.இது நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன் மேலும் வலுப்படுத்தப்படும்.இவ்வாறு உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

v gopal
மே 13, 2025 20:53

மிகவும் சரியாய் சொன்னீர்கள்


subramanian
மே 13, 2025 19:50

இதுபோன்ற ஏவுகணை தடுப்பு நாமும் தயாரிக்க முடியும். ரஷ்யா ஆதரவு தர வேண்டும்.


lana
மே 13, 2025 17:32

ஐயா gst வரி வசூலிப்பது மத்திய அரசு மட்டும் அல்ல, மாநில அரசு உம் தான். gst இல sgst என்பது மாநில அரசின் பங்கு. அதை அவர்களே வசூலித்து வைத்து கொள்வார்கள். வேண்டும் என்றால் tamil nadu goods and services Tax 2017 என்ற சட்டத்தை பாருங்கள். இது வணிக வரித்துறை அதிகாரிகள் ஆல் வசூலிக்க படுகிறது. இந்த உருட்டு வெளியே தெரியாமல் இருக்க தான் அந்த department பேர் இன்னும் வணிக வரித்துறை என்றே உள்ளது. இதன் அமைச்சர் மூர்த்தி


சிவம்
மே 13, 2025 18:28

எதோ புதிதாக கண்டுபிடித்து விட்டது போல் GST க்கு விளக்கம் கொடுக்கிறீர்கள். மத்திய அரசின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் பல. ஆனால் இந்த GST வரி வசூலுக்கு தானே இதனை எதிர்ப்பு. அதை வைத்து அரசியல் வேறு செய்கிறார்கள். gst council பற்றியும், அதில் மத்திய அரசின் பங்கு பற்றியும் பல முறை விளக்கம் அளித்தாலும், நிதி அமைச்சரை ஊறுகாய் ... என்று ஏளனம் வேறு. அதனால் தான் gst என்று குறிப்பிட்டேன்.


சிவம்
மே 13, 2025 17:12

நம்மிடம் இருந்து வசூலிக்கப்படும் GST எப்படி நம் நாட்டை காப்பாற்றி இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒரு வேளை ஆயுதங்கள் வாங்க நம்மிடம் பணம் இல்லாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் அணு ஆயுதத்தை நம் நாட்டின் மீது வீசி இருந்தால் நாம் எப்படி தடுத்திருக்க முடியும். அதனால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரழிவு நம் ஒவ்வொருவருக்கும் தான். மத்திய அரசு வசூலிக்கும் வரி பணங்கள் அனைத்தும், நம் மக்களுக்கும் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கும் தான் பயன் படுத்த படுகிறது. அவை நம் நாட்டின் கவசங்கள். அவை எப்போதாவது தான் பயன் தரும். இப்போது பயன் தந்திருக்கிறது. இதை புரிந்து கொண்டால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் நல்லது. நாம் இதுவரை கொடுத்த வரிப்பணம் நம் அனைவரின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை