உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள புரன் குமார் என்ற அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார். 2001 பேட்சை சேர்ந்த இவர் தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இன்று( அக்.,07) மதியம் 1:30 மணியளவில் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. இவரது மனைவி அமனும் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். அவர் தற்போது அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். கணவர் மரணம் குறித்து அறிந்ததும் அவர் நாளை சொந்த ஊர் திரும்புகிறார்.சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ