உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 14 நிமிடங்களில் ஐயப்பன் படம் சிறுவர்களுக்கு ஏ.டி.ஜி.பி., பாராட்டு

14 நிமிடங்களில் ஐயப்பன் படம் சிறுவர்களுக்கு ஏ.டி.ஜி.பி., பாராட்டு

சபரிமலை:504 ரூபிக்ஸ் கியூபுகளால் (சதுர வண்ணக்கடை) 14 நிமிடங்களில் பெரிய ஐயப்பசுவாமி படத்தை வடிவமைத்த சிறுவர்களை கேரள மாநில போலீஸ் ஏ.டி.ஜி.பி., எஸ்.ஸ்ரீஜித் பாராட்டினார்.கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி பிஜோய் - இந்து. தம்பதியின் மகன்கள் அபினவ் 10, அத்வைத் 7. இவர்கள் இருவரும் ரூபிக்ஸ் கியூபுகளால் படங்களை உருவாக்குவதில் வல்லவர்கள். பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் படங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.இந்நிலையில் சபரிமலை வந்த இரு சிறுவர்களும் சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் ஐயப்பசுவாமி படத்தை உருவாக்கினர். சபரிமலை பாதுகாப்பு பொறுப்பு வகிக்கும் ஏ.டி.ஜி.பி., ஸ்ரீஜித் முன்னிலையில் சிறுவர்கள் வேகமாக ஐயப்பசுவாமி படத்தை உருவாக்கினர். மொத்தம் 504 ரூபிக்ஸ் கியூபுகளால் 14 நிமிடங்களில் படத்தை நிறைவு செய்தனர். இருவரையும் ஏ.டி.ஜி.பி., பாராட்டினார். ஏராளமான பக்தர்கள் சரண கோஷம் முழக்கியும் கையொலி எழுப்பியும் சிறுவர்களை ஊக்குவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை