உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் 20, பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டில்லியில் 20, பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் 20 பள்ளிகளுக்கும், பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாக டில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இன்று 20 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சிவில் லைன்ஸில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ், பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினியில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி மற்றும் ரோஹினியில் உள்ள தி சவரன் பள்ளி உட்பட மொத்தம் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சம்பந்தபட்ட பள்ளிகளில் போலீசார் சோதனை நடத்தினர். பின்னர், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய இ மெயில் முகவரியை கைப்பற்றிய போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பெங்களூருவில் 40 பள்ளிகள்!

அதேபோல், பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலை அடுத்து பள்ளிகளில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று கண்டறியும் முயற்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 18, 2025 12:08

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று கண்டறியும் முயற்சி நடக்கிறது. முயற்சியே வேண்டாம். எல்லாம் ஒன்று அந்த குடிகாரர்களாக இருக்கும், அல்லது அந்த அமைதி மார்கத்தினராக இருக்கும்.


Ganesh
ஜூலை 18, 2025 12:06

முதலில் இந்த மாதிரி புரளி கிளப்புவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு அடைக்க வேண்டும்... அது மைனர் ஆக இருந்தாலும் sari


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை