உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்பாக்கிச் சண்டைக்கு பின் முக்கிய குற்றவாளிகள் கைது

துப்பாக்கிச் சண்டைக்கு பின் முக்கிய குற்றவாளிகள் கைது

புதுடில்லி:டில்லி மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் தொடர்புடைய இருவரை துப்பாக்கிச் சண்டைக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.டில்லி ஜி.டி.பி., மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஹாஷிம் பாபா கும்பலைச் சேர்ந்த இருவர் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உத்தர பிரதேச போலீசாருடன் இணைந்து சிறப்பு படை உருவாக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் டில்லி - ஹரித்வார் நெடுஞ்சாலையில் முசாபர்நகரின் அருகே வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.காரில் இருந்த மூவரும் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இதில் காரில் இருந்த மூவருக்கும் குண்டு காயம் ஏற்பட்டது. வடகிழக்கு டில்லியின் சவுகான் பங்கரில் வசிக்கும் அனஸ் கான், 18, ஆசாத் அமீம், 21, ஆகிய இருவர் உட்பட மூவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அனஸ்கான், ஆசாத் அமீம் ஆகிய இருவர் மீதும் 12க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.துப்பாக்கிச் சண்டையில் மொத்தம் எட்டு ரவுண்டுகள் சுடப்பட்டன.-- குற்றவாளிகளிடமிருந்து மூன்று அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஒன்பது தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி