உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் ஓகே; ஹரியானா முடிவை ஏற்க மாட்டோம்; அழுது புலம்புகிறது காங்கிரஸ்

ஜம்மு காஷ்மீர் ஓகே; ஹரியானா முடிவை ஏற்க மாட்டோம்; அழுது புலம்புகிறது காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவு மக்கள் விருப்பத்திற்கு எதிராக வந்துள்ளது. இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், '' என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

நிராகரிப்பு

ஹரியானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த காங்கிரஸ், நேரம் செல்ல செல்ல பின்தங்கி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து, ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் சரியாக இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை என அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே, இக்குற்றச்சாட்டு பொய்யானது எனக்கூறி அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.இதனையடுத்து நிருபர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பவன் கெரா, மற்றும் ஹரியானா தேர்தல் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.

எதிர்பாராதது

அப்போது, பவன் கெரா கூறியதாவது: தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறலாம். இது குறித்து புகார்கள் தொடர்ச்சியாக வருகின்றன. ஹிசர், மகேந்திரகார்க் மற்றும் பானிபட் நகரங்களில் மின்னணு ஓட்டு இயந்திரங்களில் கோளாறு உள்ளதாக கட்சி வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அதில் உள்ள ஒரு பேட்டரிகள் செயல்படவில்லை என்கின்றனர். இத்தேர்தலில் முடிவுகள் மூலம் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். புகார்களை நாங்கள் பெற்றுவருகிறோம். தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் மனு அளித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்க உள்ளோம். தேர்தல் முடிவுகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை. ஹரியானாவில் இருந்து இவ்வாறு எதிர்பாராத முடிவு வரும் வரை என யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் ஆச்சர்யத்துடன் உள்ளனர்.

ஆச்சர்யம்

ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:தேர்தல் முடிவு எதிர்பார்க்காதது. ஆச்சர்யமாக உள்ளது. கள நிலவரத்திற்கு எதிராக உள்ளது. ஹரியானா மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஆட்சி மாற்றம் என்ற விருப்பத்திற்கு எதிராகவும் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.ஓட்டு எண்ணிக்கை குறித்தும், மின்னணு ஓட்டு எந்திரம் செயல்பாடு குறித்தும் மூன்று மாவட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கட்சி நிர்வாகிகளுடன் பேசி உளளோம். புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம். எங்களது வேட்பாளர்கள் எழுப்பிய கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உள்ளோம். ஹரியானா தேர்தல் வெற்றி என்பது முறைகேடான வெற்றி. மக்களின் விருப்பத்திற்கு எதிரான வெற்றி. வெளிப்படையான ஜனநாயகத்திற்கு எதிரான வெற்றி. காஷ்மீரிலும் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கக்கூடாது என முயற்சி நடந்தது. ஆனால், மக்கள் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். இவ்வாறுஅவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 72 )

Sundaran
அக் 15, 2024 08:19

இவனுங்க ஜெயித்தால் நல்ல தேர்தல் தோற்றால் கெட்ட தேர்தல் . இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி குலைப்பார்களோ தெரிய வில்லை


நிக்கோல்தாம்சன்
அக் 14, 2024 20:20

இரு மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வாக்கு மெஷின் தான் உபயோக படுத்தப்பட்டுள்ளது , அப்புறமும் ? போயி போகத் மாதிரி நாடகம் போட்டு நாட்டின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துங்க


Lion Drsekar
அக் 12, 2024 16:38

அருமையானபுகைப்படம், இருவர் முகத்தையும் பாக்கும்போது ஏதோ ஹிந்துஸ்தானி பாடல் பாடும் கலைஞர்கள் போல் இருக்கிறார்கள் , வந்தே மாதரம்


karthik
அக் 09, 2024 13:36

அங்க மட்டும் என்னடா 5 சதவீதம் ஓட்டு தானே வாங்கி இருக்கீங்க? அதும் காஷ்மீர் பகுதியில்..


Rasheel
அக் 09, 2024 13:28

அரசியல் என்பது ஒரு முழு நேர வேலை. எதிர் கட்சி தலைவர் என்பது, நிழல் பிரதமர் என்பது பெயர். ஆனால் பொறுப்பு இல்லாமல் உள் நாட்டில் ஒன்று வெளி நாட்டில் ஒன்று என்று பேசுவது, இன்றைய IT உலகத்தில் மக்களை ஏமாற்ற முடியாது.


RAAJ68
அக் 09, 2024 09:29

நீதிமன்றம் சென்று மறுபடியும் ஓட்டுக்களை எண்ணுவதற்கு வழி செய்யவும் . பிஜேபி ஆட்சி அமைப்பதற்கு தடை வாங்குங்கள்.


kalyan
அக் 09, 2024 03:59

ஹரியானாவில் காங்கிரஸ் தோற்றதால் மீண்டும் விவசாயிகளை தூண்டி விட்டு டெல்லி அனுப்பும் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டு விட்டது . ஹரியானா பஞ்சாபின் எல்லையிலேயே சைனி விவசாயிகளை தடுத்து நிறுத்தி விடுவார் .அதனால் தான் இந்த ஒப்பாரி புலம்பல் எல்லாம்


Yaro Oruvan
அக் 08, 2024 23:53

ஜம்மு காஷ்மீர் ஒட்டு சதவீதம் பாஜக 26 சதவீதம் 14,62,225 .. அடுத்து பரூக் அப்துல்லா கட்சி 23% 13,36,147, கான்+கிராஸ் 12% 682,666 - தேர்தல் கமிஷன் இணையத்தில் எடுத்த தகவல். அதிக ஓட்டுகள் வாங்கிய கட்சி பாஜக.. தேர்தல் உரைப்படி JNK அதிக இடங்கள் 42 பெற்றுள்ளது அதை ஏற்றுக்கொள்கிறோம்.. ஆனால் பாஜக எந்த அளவிற்கு அங்கு வளர்ந்துள்ளது என்பதை இங்குள்ள திராவிஷ பத்திரிகைகள் ஏற்றுக்கொள்ளாது.. 90% இஸ்லாமியர் ஆளும் ஜம்மு காஷ்மீரில் அதிக ஓட்டுக்கள் பாஜக வாங்கியுள்ளது .. ஆனால் நமது உள்ளூர் முல்லாக்கள் பாஜக ஒழிக என்பார்கள்.. தீயமுகவிற்கு கும்பலாக ஒட்டு போட்டு நாசமாப் போவோம் என்று டம் பிடிப்பார்கள் .. உங்கள திருத்த முடியாது... கும்பலா குத்துங்க


Yaro Oruvan
அக் 08, 2024 23:40

அடங்கொய்யால.. நீங்க ஜெயிச்சா மக்கள் தீர்ப்பு.. பாஜக ஜெயிச்சா ஏத்துக்க முடியாது ஏத்துக்காத.. போ போயி சொவத்துல முட்டிக்கொ.. இன்னும் இவனுவல நம்புறது ... கூட்டம்


RAJ
அக் 08, 2024 23:26

நீங்க என்ன அழுது புரண்டாலும் , ரவுலு பாக்கெட்ல இருந்து கைய எடுக்கமாட்டேனு பிடிவாதமா இருக்காரே ... ஒரு வேல பாக்கெட்க்குல ரிமோட் இருக்குமோ??


புதிய வீடியோ