உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசாவின் சந்த்பூரில் இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் நடந்த இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை 'அக்னி-3', வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.அக்னி-3 ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இது 3,000 முதல் 3,500 கி.மீ. க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.இந்த ஏவுகணை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் தயாரிக்கப்படுகிறது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
பிப் 07, 2026 11:49

ஆஹா ............


ANNADURAI MANI
பிப் 07, 2026 09:36

மாண்பு மிகு எ பி ஜே அய்யா அவர்களின் வெற்றி


Barakat Ali
பிப் 07, 2026 11:50

மறைந்த பிறகும் ஏவுகணை சோதனையில் வெற்றி அடைந்து கொண்டே இருப்பது அரிதிலும் அரிது .....


Kasimani Baskaran
பிப் 07, 2026 06:15

வாழ்த்துகள்


Palanisamy Sekar
பிப் 07, 2026 00:05

தூக்கம் தொலைப்பார்கள் எதிரிகள். மோடிஜி தலைமையில் நாட்டின் அதிவேகமான முன்னேற்றமானது இந்தியாவின் பெருமைக்கு இன்னோர் மகுடம். அணைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள் வந்தனங்கள்


ராஜ்
பிப் 06, 2026 22:20

வாழ்த்துக்கள்


முக்கிய வீடியோ