உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் செல்லும் திறன் கொண்ட அக்னி-4 பாலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இந்த சோதனையை பிராந்திய ராணுவ தலைமையகம் செய்தது.இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி -4 ஏவுகணை இன்று[ ஆகஸ்ட் 06 ] ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் சோதனை செய்யப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்தது. இந்த சோதனையில், அனைத்து செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட முடிவுகளை எட்டியது எனத் தெரிவித்துள்ளது.இந்த ஏவுகணை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது. இந்த ஏவுகணையானது திட எரிபொருள் ராக்கெட் மோட்டார் வாயிலாக இரண்டு நிலைகளில், தரையில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sridhar Venkadesan
ஆக 07, 2026 17:08

JAI HIND


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2026 09:35

அக்னி 6 விரைவில் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் .... அக்னி 4, 5 ஆகியவற்றின் உற்பத்தி அதிக அளவில் செய்யப்பட வேண்டும் .....


naranam
ஆக 07, 2026 04:37

சபாஷ் இந்தியா! ஆனால் துருக்கி 4560 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..அக்னி 5, 6 ஆகியவையும் தேவைப் படுகின்றன.


பப்பு யாதவ், அக்பர் சாலை, ஜன்பத், டெல்லி
ஆக 07, 2026 08:01

விரைவில் வரும். இது ஒண்ணும் ஊழல் கான் க்ராஸ் தேசத்தின் throki அரசு அல்ல


karthik
ஆக 07, 2026 09:13

துருக்கி 3500 கிலோமீட்டர் தான்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2026 09:36

துருக்கி நம்மை இனி வெளிப்படையாகப் பகைக்காது .... நமது அக்னி 5 இன் எல்லை 8000 கிமீ ....


ஜெகதீசன்
ஆக 06, 2026 21:34

சபாஷ்... இந்தியா.


ஆனந்த்
ஆக 06, 2026 21:26

வாழ்த்துக்கள் இந்தியா.


முக்கிய வீடியோ