உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ சாதனைக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ சாதனைக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது அக்னி பிரைம் ஏவுகணை. இந்த ஏவுகணை முதல் முறையாக ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்தது. இந்த சாதனையை டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு விஞ்ஞானிகள் நிகழ்த்தி இருக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xkpbi3l9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டாக நாடாக இந்தியா மாறியது. வெற்றிகரமாக அக்னி பிரைம் ஏவுகணை சோதனை செய்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து அக்னி ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணை 2000 கிமீ வரை சென்று தாக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுகணை சோதனை சிறப்பாக செய்யப்பட்டது.இந்த ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்கு டிஆர்டிஓ, மற்றும் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றிகரமான சோதனை இந்தியாவை ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவுகணைகள் ஏவும் திறன் கொண்ட நாடாக மாற்றி உள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

rajendran abudhabi
செப் 25, 2025 18:42

Congratulations to the whole Team. Congratulations to PM and Defence minister.


essemm
செப் 25, 2025 18:33

நாமும் இந்தியன் என்ற பெருமைக்கு உரியவர்களாகிவிட்டோம். வளர்க பாரதம் ஜெய் ஹிந்த்.


Rathna
செப் 25, 2025 16:38

கடந்த 5 ஆண்டுகளில் வருடத்திற்கு 2 லக்ஷம் கோடி ரூபாய் ராணுவ உபகரண ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது. அவற்றில் 70% தொகை - 1 லக்ஷம் 40 ஆயிரம் கோடி ரூபாய் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பொது துறை நிறுவனங்களுக்கு செல்கிறது. இதனால் வேலை வாய்ப்பு மற்றும் உள் நாட்டு பொருட்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது.


MARUTHU PANDIAR
செப் 25, 2025 13:29

இஸ்ரோ ஆகட்டும் DRDO ஆகட்டும் ஒரு வலிமையான அர்த்தமுள்ள அரசு மையத்தில் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.


Ramesh Sargam
செப் 25, 2025 12:05

டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2025 10:45

சீனாவைக் கட்டிப்புடிச்சுக்கிட்டே அவனுக்கு ஆப்பு ரெடி பண்ணுறது ராஜதந்திரம் .......


Arjun
செப் 25, 2025 10:37

நமது விஞ்ஞானிகளுக்கும் ,மத்திய அரசுக்கும் நன்றி


Madras Madra
செப் 25, 2025 10:27

இருப்பு பாதையை சீனா வரைக்கும் போட்டு வைத்து கொள்வது நல்லது


Ramamoorthy M
செப் 25, 2025 09:54

நமது பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்த DRDOவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!


Nagarajan D
செப் 25, 2025 09:51

வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளே


புதிய வீடியோ