உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆமதாபாத் விமான விபத்து; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

ஆமதாபாத் விமான விபத்து; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்துக்குள்ளான பிறகு, ஏர் இந்தியா விமான சரக்குகளை கையாளும் பிரிவு நிறுவன (AISATS) ஊழியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சீனியர் அதிகாரிகள் 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். குஜராத் ஆமதாபாத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்துகள் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jmbepet8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விமானத்தின் இரு கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டு, தரவுகள் பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், விமான விபத்து நடந்த பிறகு, ஏர் இந்தியாவின் சரக்குகள் கையாளும் பிரிவு நிறுவன ஊழியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாத நிலையில், விமான விபத்து நிகழ்ந்த ஜூன் 12ம் தேதிக்கு பிறகு தான் இது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், 4 சீனியர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஏர் இந்தியாவின் சரக்குகள் கையாளும் பிரிவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 'விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துணை நிற்கிறோம். அண்மையில் வெளியான வீடியோவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த நடத்தை எங்களை மதிப்பிடாது. இதில், தொடர்புடையவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுதாபம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்,' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

மூர்க்கன்
ஜூன் 30, 2025 15:48

ஆட்சிக்கு வந்து பல வருஷங்கள் ஓடி போயிடுச்சு இன்னுமா காங்கிரஸ் ஒவ்வாமை உங்கள விட்டு போகல??


Mayavi
ஜூன் 30, 2025 05:24

அவசரப்பட்டு எடுத்த நடவடிக்கை... கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்


Ravi Kulasekaran
ஜூன் 29, 2025 21:41

அந்த மிருகங்களை பதவியை பறிக்க வேண்டும் தீவிரவாதிகளாக கூட இருக்கலாம் வீடு கம்பியூட்டர் லேப்டாப் மொபைல் எல்லாம் ஆய்வு செய்து இருட்டறை தண்டனை, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்


Manoharan Thangavelu
ஜூன் 29, 2025 18:54

விமான இழப்பினால் ஏர் இந்தியாவுக்கு கிடைத்த இன்சியூரன்ஸ் தொகையுடன் ஒப்பிடும்போது இறப்பிலும் வருமானம் பார்த்திருக்கறது என்பது தெரிய வரும்.


M Zahir Hussain
ஜூன் 29, 2025 13:05

பணி நீக்கம் மட்டும் போதாது. சிறையில் அடைக்க வேண்டும் 7 வருடங்களுக்கு குறையாமல்


Raghuraman P
ஜூன் 29, 2025 21:40

ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும்


Satheesh Sassh
ஜூன் 29, 2025 10:50

நம்ப கண்ணில் பட்ட அனைத்துக்கும் கருது சொல்லிவிட முடியாது ..சிலது உணர்வு சார்ந்ததாக இருக்கும். அவர்களை சந்தோஷமாக இருக்க வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது .. அவர்கள் சந்தோஷத்தை இப்படி காணொளி பதிவு செய்து கொண்டாட தேவையே இல்லையே.. யோசித்து பாருங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு முக்கியமான நபரின் இழப்பு அந்த விபத்தில் நடந்து இருந்து எதோ ஒரு சந்தர்பத்தில் இந்த பதிவை பார்க்க நேர்ந்தால் உங்கள் மனம் எவ்வளவு பாடுபடும் ..கருது சொல்லும் முன் பாதிக்கப்பட ஒரு மனிதனாக இதை அணுகினால நாம் இதற்கு எந்த கருதும் சொல்ல மாட்டோம் .. மௌனமாக கடந்து விடுவோம்.


Indian
ஜூன் 28, 2025 16:05

If they are enjoing for some party no issues But this is for the accedent they are celebrating


Ramesh Sargam
ஜூன் 28, 2025 11:46

மனிதாபிமானமற்ற அந்த மிருகங்களை பணியில் இருந்து நீக்கி, கடுமையாக தண்டிக்கவும் வேண்டும். கேடுகெட்ட ஜென்மங்கள்.


RAMANATHAN MUTHIAH
ஜூன் 28, 2025 11:41

நடவடிக்கை சரி என்றே முதல் பார்வையில் தோன்றும். ஆழ்ந்து யோசித்தால் இதுபோல் சொரணை அற்ற இந்தசென்ஸிட்டிவ் செயல்களை தவிர்த்திருக்கலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இவ்வளவு கடுமையாக நடவடிக்கை எடுப்பது எந்த அளவு சரியாகும் என்று யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்து சேவைகள் நடக்கின்றன ஒரு நாளைக்கு எங்காவது ஒரு இடத்தில் விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பெரிய விபத்து என்றே வைத்துக் கொள்வோம் ஒரு பேருந்து விபத்து நடந்து விட்டது என்றால் தமிழக அரசு பேருந்தில் வேலை செய்பவர்களும் இல்லை தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களும் சிரிக்கவே கூடாது அவர்கள் வாழ்க்கை முடிந்து போய் விட்டது என்று மூஞ்சியை தொங்க போட்டு கொண்டு திரிய வேண்டுமா? எத்தனை நாளைக்கு அதுக்கு என்ன நடைமுறை வரைமுறை?


Natchimuthu Chithiraisamy
ஜூன் 28, 2025 11:05

விமான நிறுவனம் கோடிக்கணக்கில் நஷ்டஈடு கொடுத்துக்கொண்டிருக்கிறது ஊழியர்கள் கொண்டாடினால் இது வேலைசெய்யும் நிறுவனத்திற்கு விசுவாசம் இல்லை. சம்பந்தப்பட்டவரை தூக்கினால் மட்டுமே கஷ்டம் தெரியும். கஞ்சிக்கு அவன் அப்பன் எப்படியோ போடுவான் என்கிற நம்பிக்கை . வளர்ந்த நாட்டில் அடக்கவோ ஒழுங்குபடுத்தவோ முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை