உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; மும்பையில் அவசர தரையிறக்கம்

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; மும்பையில் அவசர தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகரத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மும்பைக்கே திரும்பியது.,இதுபற்றிய விவரம் வருமாறு; மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி அருகே நெவார்க் நகரத்துக்கு ஏர் இந்தியா விமானம் AI 191 இன்று (அக்.22) புறப்பட்டுச் சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானிகள் குழு கண்டறிந்தனர்.இதையடுத்து, ஏர் இந்தியா விமானம் உடனடியாக மீண்டும் மும்பைக்கே திருப்பி விடப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து பயணிகளிடம் தெரிவித்த விமான நிர்வாகம், அவர்கள் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்தது. பின்னர், அவர்கள் வேறு விமானத்தில் நெவார்க் நகரத்துக்குச் செல்ல ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தது. இதேபோல் நியூவர்க் நகரத்தில் மறு மார்க்கமாக மும்பை புறப்பட இருந்த விமானம் AI 144 ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
அக் 22, 2025 19:10

பேசாம மூடுவிழா நடத்திரலாம். நியூசிலாந்து காரர் மேலாண்மை வேறே.


Shankar
அக் 22, 2025 18:54

இங்கு Airbus விமானமா அல்லது Boeing விமானமா என்பதை அறிய வேண்டியதே முக்கியமானது. குஜராத் Crash க்கு பிறகு எந்த நாட்டில் போயிங் பிரச்னைக்குள்ளாக்கினாலும், நம்மால் " அறியமுடியாதவாறு " உள்ளது . அவசரமான நிலமைக்குள்ளான விமான " BOEING 777 "


M. PALANIAPPAN, KERALA
அக் 22, 2025 14:20

தொடர் கதை, அஹமதாபாத் விமான விபத்திற்கு பிறகு மிகவும் கவனமுடன் செயல்படுவதால் எந்த சிறிய குறைவு இருந்தாலும் விமானிகள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை


Sun
அக் 22, 2025 14:12

ஏர் இந்தியா விமானத்தில்தான் தினந் தோறும் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு வருகிறதே? இனி கோளாறு இல்லாமல் இருந்தால் மட்டும் இன்று ஏர் இந்தியாவின் எந்த ஒரு விமானத்திலும் கோளாறு ஏதும் இல்லை என்பதை மட்டும் செய்தியாக போடுங்கள். அதுதான் சரியாக இருக்கும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை