வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தில ஒரு சௌகரியம். இங்கிலீஷில் இருப்பதை அப்படியே இந்தி எழுத்துக்களில் எழுதிடுவாங்க. தமிழில் இப்பிடி செய்தால் இதுதான் தமுழை வளத்க்கும் லட்சணமான்னு அண்ணாமலை, மோடி, கெவுனர், எல்லோரும் கெளம்பிடுவாங்க.
புதுடில்லி: ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (ஏ.ஐ.ஏ.எஸ்.எல்.,) மும்பை சர்வதேச விமான நிலையத்தில் டியூட்டி மேனேஜர், ஜூனியர் ஆபீசர், டியூட்டி மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு 1067 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூன்றாண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.மும்பை சர்வதேச விமான நிலையத்தில், காலி இடங்களை நிரப்ப ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்யூடிவ், கஸ்டமர் சர்வீஸ் ஆபிஸர், டியூட்டி மேனேஜர், டியூட்டி ஆபிசர், பாரா மெடிக்கல் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்யூடிவ் உள்ளிட்ட பதவிகளுக்கு 797 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Ramp Service Executive, Utility Agent Cum Ramp Driver பதவிகளுக்கு 270 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.நேர்காணல் எப்போது?
அக்டோபர் 22ம் தேதி முதல் அக்டோபர் 26ம் தேதி வரை ஆகும்.நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.இடம்: ஜி.எஸ்.டி., வளாகம், சஹார் காவல் நிலையம் அருகில், சி.எஸ்.எம்.ஐ., விமான நிலையம், டெர்மினல்-2, கேட் எண். 5, மும்பை - 400-099.வயது வரம்பு
விண்ணப்பதாரர், குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பதாரர்கள் நேர்காணலிற்கு வரும்போது, விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொண்டுவர வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தில ஒரு சௌகரியம். இங்கிலீஷில் இருப்பதை அப்படியே இந்தி எழுத்துக்களில் எழுதிடுவாங்க. தமிழில் இப்பிடி செய்தால் இதுதான் தமுழை வளத்க்கும் லட்சணமான்னு அண்ணாமலை, மோடி, கெவுனர், எல்லோரும் கெளம்பிடுவாங்க.