உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வானில் பறக்கும்போது இயந்திரக் கோளாறு; 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் தப்பியது

வானில் பறக்கும்போது இயந்திரக் கோளாறு; 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் தப்பியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள், 154 பேருடன் நள்ளிரவில், சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக, மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது.மும்பையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு (ஜூன் 27) 11 மணிக்கு, 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் அந்த விமானம் தாமதமாக, நள்ளிரவு 12 மணிக்கு, சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம், நடுவானில் சென்னையை நோக்கி பறந்து கொண்டு இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ozx0pc8l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை, விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விட்டு, மீண்டும் விமானத்தை திருப்பி கொண்டு சென்று, மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.விமானப் பொறியாளர்கள் குழுவினர் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இயந்திர கோளாறுகளை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். ஏர் இந்தியா விமான நிறுவனம் மாற்று விமானத்தை பயணிகள் அனைவருக்கும் ஏற்பாடு செய்தது. இந்த விமானம் இன்று (ஜூன் 28) அதிகாலை 4.35 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டு, காலை 6.05 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது. மும்பையில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக, மும்பைக்கே திரும்பி சென்று, அதன் பின்பு மாற்று விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, மீண்டும் மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தது.இதன் காரணமாக, அந்த விமானம் சுமார் 5 மணி நேரம் தாமதமாக, சென்னைக்கு வந்து சேர்ந்தது. இதனால் விமானத்தில் வந்த 148 பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R S BALA
ஜூன் 28, 2025 21:30

இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது... அது அவிங்க விதி. என்ற வசனம்தான் இங்கு பொருந்தும்..


sridhar
ஜூன் 28, 2025 21:03

விமானங்களை தரை வழியே ஓட்டினால் விபத்துக்கள் குறையும் . கட்டணமும் குறையும்.


Yasararafath
ஜூன் 28, 2025 13:38

விமானங்களை முழுவதும் ரத்து செய்வது நல்லது


Ramesh Sargam
ஜூன் 28, 2025 11:31

ஏர் இந்தியா விமானங்கள் அனைத்துமே காயலாங்கடைக்கு போடப்படவேண்டியவை. இனியும் யாரவது அதில் பயணிக்க விரும்பினால் அது அவர்கள் விதி அல்ல, முட்டாள்தனம்.


Apposthalan samlin
ஜூன் 28, 2025 10:41

ஏர் இந்தியா விமானத்தை பழைய விமானங்களை கண்டம் பண்ணி விட்டு புது விமானம் வாங்கி இயக்க வேண்டும் வேலை செய்யாத ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் .


M Ramachandran
ஜூன் 28, 2025 10:16

எந்தா நாட்டிலும் இல்லாத அளவிற்கு இஙகு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மக்கள் உயிர்பற்றி காவலிய்ய படாமல் இயஙகும் அரசியல்கும்பல் அயல் நாட்டு கை கூலிகளாக இயங்கி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்து வருவது கடினமான நிலையில்நாம் உள்ளோம். நாம் மத்திய அரசுக்கு உறு துணையாகாயிருக்க வேண்டிய தருணம்


M Ramachandran
ஜூன் 28, 2025 10:10

ஜோதிடர்கள் கூற்று உண்மையாகி கொண்டிருக்கிறது. மிக கவனமாக இருக்க வேலாண்டிய தருணம்.இனியும் அந்த நிலை தொடரலாம் மற்றும் ஐய சீற்றத்தினால் பல உயிர்யிழப்புகள் நேராலாம்.முனேஆர்ப்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய தருணம்.