உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸோகோ இமெயிலுக்கு மாறினார் அமித்ஷா: நன்றி தெரிவித்தார் ஸ்ரீதர் வேம்பு

ஸோகோ இமெயிலுக்கு மாறினார் அமித்ஷா: நன்றி தெரிவித்தார் ஸ்ரீதர் வேம்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஸோகோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்காக அந்த நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விதிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டைச் சேர்ந்த தயாரிப்புகளுக்கு மாற்றாக இந்திய தயாரிப்புகளை பயன்படுத்த நமது நாட்டினர் துவங்கி உள்ளனர். அந்த வகையில், ஸோகோ நிறுவனத்தின் மீது இந்தியர்களின் கவனம் திரும்பி உள்ளது. அந்த நிறுவனத்தின் ஸோகோ இமெயில், அரட்டை செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, டாக்குமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட்ஸ் மற்றும் பிரசன்டேஷன் தயாரிக்க மைக்ரோசாப்டுக்கு பதிலாக இந்திய தளமான ஸோஹோவுக்கு மாறியதாக அறிவித்து இருந்தார்.மத்திய கல்வி அமைச்சகமும், அலுவலகத்தில் ஸோகோ தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸோகோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: ஸோகோ இமெயிலுக்கு மாறிவிட்டேன். எனது இமெயில் முகவரி மாற்றத்தை குறித்து கொள்ளுங்கள்.எனது புதிய இமெயில் முகவரி amitshah.zohomail.in.எதிர்காலங்களில் தகவல் பரிமாற்றத்துக்கு இந்த முகவரியை பயன்படுத்துங்கள். இந்த விஷயத்திற்கு கவனம் செலுத்தியதற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி

இதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இந்த தருணத்தை ஸோகோவில் 20 ஆண்டுக்கும் மேலாக கடுமையாக உழைத்த எங்கள் பொறியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்களுக்கு நம்பிக்கை இருந்த காரணத்தினால், இத்தனை ஆண்டுகள் அவர்கள் இந்தியாவில் தங்கியிருந்து இத்தனை ஆண்டுகள் உழைத்தனர். அவர்களின் நம்பிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த். ஜெய் பாரத். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
அக் 08, 2025 22:53

அரட்டை என்பதை சமஸ்க்ரிதத்தில் பெயரிடவேண்டும். நாட்டுப்பற்றுள்ளவர்கள் அனைவரும் சோஹோ வலைத்தளங்களுக்கு மாறவேண்டும்.


Harindra Prasad R
அக் 08, 2025 22:05

zoho விற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்


K.Ravi Chandran, Pudukkottai
அக் 08, 2025 19:04

தற்போதைய டிரம்பின் நடவடிக்கை நமக்கெல்லாம் ஒரு பாடம். நாளை இவரை விட மோசமான ஒருவர் வந்து திடீரென வேறு மாதிரியான நடவடிக்கை எடுத்தால் ஜாதி ,மதம் பாகுபாடு இல்லாமல் நாம் எல்லோருமே பாதிக்கப் படுவோம். அதனால் நமது சுதேசி இணைய சேவைகளை பயன் படுத்த தொடங்குவோம். சேவைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் எல்லோருமே விரைவில் மாறி விடுவார்கள்.


spr
அக் 08, 2025 17:49

அமைச்சரின் தனிப்பட்ட மின்னஞ்சல் மாறியுள்ளமைக்குப் பாராட்டுக்கள் இனி ஸோகோ மின்னஞ்சல் அமைப்புக்குப் பொறுப்பு அதிகமாகிவிட்டது. எனவே அதனை பன்னாட்டு மின்னஞ்சல் அளவிற்குத் தரம் உயர்த்த வேண்டும் இன்னமும் பன்னாட்டுத் தகவல் தொடர்பு தோழி நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் அதன் அனைத்து துறைகளையும் விட்டு வெளியேறித் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் இறுதியாக ஒரு வேண்டுகோள் பொதுவாகவே சின்ன மீனைப் பெரிய மீன்கள் சாப்பிடும் முறையே என்றாலும், அனைத்து நிறுவனங்களும் செய்வது போல எங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தனிப்பட்ட விவரங்களை சேமித்து பன்னாட்டு மின்னஞ்சல் நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் பண்ணாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் கட்டாயத்திட்குட்பட்டு மறைமுகமாக இந்தியைத் திணிக்காமல் இருக்க வேண்டும்


V Venkatachalam
அக் 08, 2025 17:26

தினமலருக்கு நன்றி. அரட்டைக்கு பிரதான விளம்பரம் செய்த தினமலருக்கு நன்றி. தினமலரில் செய்தியை பார்த்துதான் அரட்டை செயலி பற்றி அறிந்தேன்.‌ தினமலர் ஸோஹோ வை பற்றியும் அரட்டை செயலி பற்றியும் விரிவாக செய்தி வெளியிட்டது அதன் சிறப்பை மேலும் உயர்த்துவதாக இருக்கிறது. தினமலருக்கு மீண்டும் நன்றி. வாழ்த்துக்கள்.


Senthamizhsudar
அக் 08, 2025 17:23

நான் அரட்டை சோகோ மின் அஞ்சல் கணக்கு துவங்கிவிட்டேன்


Rathna
அக் 08, 2025 17:18

அமெரிக்கா நிறுவனங்களை, அதன் முதுகு எலும்பை முறிக்கும் வேலை மிக வேகமாக நடக்க வேண்டும். மைக்ரோசாப்ட், கூகுள, gpay, அமேசான், பிளிப்கார்ட், you tube, facebook, twitter, இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களின் பல லக்ஷம் கோடி ரூபாய் லாபத்தில் கை வைத்தாலே, அமெரிக்கா கூட்டம் இறங்கி வரும். இதை ஒவ்வருவரும் செய்ய வேண்டும்.


Field Marshal
அக் 08, 2025 17:05

திராவிட மாடலுக்கு சரிப்பட்டு வரவில்லையா ? ஒரு வாழ்த்து தெரிவிக்க மனம் வரவில்லை ..காசா பற்றி கவலையில் நேரம் செலவாகிறது


Ramalingam Shanmugam
அக் 08, 2025 16:57

வாழ்த்துக்கள்


Ramesh
அக் 08, 2025 16:54

I will also join today


முக்கிய வீடியோ