உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளாவில் புனித நீராடிய அமித் ஷா

மஹா கும்பமேளாவில் புனித நீராடிய அமித் ஷா

மஹாகும்ப நகர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டார்.உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, அடுத்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு நீராடி வருகின்றனர்.இதுவரை, 13.21 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள், மஹா கும்பமேளாவில் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டு உள்ளதாக உ.பி., அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தன் குடும்பத்தினருடன் மஹா கும்பமேளாவில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தீர்த்தராஜ் பிரயாக் பகுதியில் துறவியருடன் இணைந்து திரிவேணி சங்கமத்தில் அமித் ஷா புனித நீராடி வழிபட்டார். அதன்பின், அங்குள்ள படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தார். இதையடுத்து, தன் குடும்பத்தினருடன் துறவியரை சந்தித்து ஆசி பெற்றார்.பிரயாக்ராஜ் வரும் முன், சமூக வலைதளத்தில் அமித் ஷா கூறுகையில், 'மஹா கும்பமேளா என்பது சனாதான கலாசார தத்துவத்தின் தனித்துவ அடையாளமாக விளங்குகிறது. கும்பமேளா, நம் வாழ்வின் தத்துவ நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது' என, குறிப்பிட்டுள்ளார்.மஹா கும்பமேளாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகா குரு பாபா ராம்தேவ், பா.ஜ., மூத்த தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஜன 28, 2025 19:35

செய்த பாவம் தீருதடா சிவ குருநாதா!


AMLA ASOKAN
ஜன 28, 2025 10:26

குஜராத் அரசில் அமைச்சராக இருந்து இவர் செய்த செயல்களுக்கு பலமுறை பல கோவில்களில் வழிபட்டு பரிகாரம் தேட வேண்டும் . முன் வினை பின் வினை பற்றிக் கவலைப்படாதவர்.


Ram
ஜன 28, 2025 08:50

ஆமாம்


Narayanan Muthu
ஜன 28, 2025 08:32

தினம் ஒரு புனித நீராடினாலும் விமோசனம் கிடைக்காது.


KumaR
ஜன 28, 2025 10:54

புருஷன் ஹிந்து மதத்தை கேவலப்படுத்தி ஹிந்து மத நம்பிக்கையை சிதைக்கும் பொது பொண்டாட்டி கோவில் கோவிலா போய் என்ன பூஜை செஞ்சாலும்....


Kasimani Baskaran
ஜன 28, 2025 07:33

திராவிடர்களின் நெருங்கிய தோழன் - ஆனால் எப்பொழுது எதிரியாவார் என்று யாராலும் கணிக்க முடியாது.


pmsamy
ஜன 28, 2025 06:57

கோடிக்கணக்கான மக்கள் வந்து சாக்கடை ஆக்கிவிட்ட அந்த இடத்தில் ....


Senthoora
ஜன 28, 2025 04:36

யார் எங்கு நீராடி மந்தார இறைவனை வேண்டினாள், நம்ம மனசு சுத்தமானால் எங்களுக்கு இறைவன் ஆசி கிடைக்கும். ஓம் நமசிவாய, சிவாயநமாக,


Kasimani Baskaran
ஜன 28, 2025 08:38

அதனாலதான் இந்திக்கூட்டணி திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டுவந்த தண்ணீரை வைத்து வீட்டில் குளிக்கிறார்களோ?


தாமரை மலர்கிறது
ஜன 28, 2025 02:24

எளிமையின் சின்னமாக அமித் ஷா திகழ்கிறார்.


govinda rasu
ஜன 28, 2025 00:23

சொந்தபலன் பாராது இந்திய நலனுக்கு பாடுபடும் தலைவர்களில் ஒருவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை