உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழங்குடியினர் மீது தாக்குதலா? குற்றவாளியை விடமாட்டோம்; எச்சரிக்கிறார் மணிப்பூர் முதல்வர்

பழங்குடியினர் மீது தாக்குதலா? குற்றவாளியை விடமாட்டோம்; எச்சரிக்கிறார் மணிப்பூர் முதல்வர்

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியின மூத்த தலைவர் மீது தாக்குதல் நடத்தியதற்கு அம்மாநில முதல்வர் பைரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என பைரேன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி - கூகி பிரிவினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஓராண்டு காலமாக மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சியால், மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. எனினும், ஒருசில இடங்களில் அவ்வப்போது சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.

சட்ட நடவடிக்கை

அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: மணிப்பூரின் பழங்குடியின மூத்த தலைவர் மைக்கேல் லாம்ஜதாங்கின் குடும்பத்தினர் மீதும், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் மீதும் தாக்குதல் நடத்தியது கோழைத்தனமான செயலாகும். வீட்டை எரித்து நாசப்படுத்திய சம்பவம் கண்டனத்துக்குரியது. மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான நேரடி சவாலாக நான் கருதுகிறேன். பழங்குடியினர் சமூகத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் மற்றும் பா.ஜ., செய்தித் தொடர்பாளர் குடும்பத்தினர் மீதான தாக்குதல் ஆகியவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thirumal s S
ஆக 27, 2024 12:00

மணிப்பூரில் இது நடந்தது மற்றும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தாரோ


Thirumal s S
ஆக 27, 2024 12:00

மணிப்பூரில் இது நடந்தது மற்றும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தாரோ


முக்கிய வீடியோ