உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாம்நகர் முதல் துவாரகா வரை 170 கி.மீ., பாதயாத்திரை செல்லும் அனந்த் அம்பானி

ஜாம்நகர் முதல் துவாரகா வரை 170 கி.மீ., பாதயாத்திரை செல்லும் அனந்த் அம்பானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜாம்நகர்: 'ரிலையன்ஸ்' நிறுவன இயக்குநர் அனந்த் அம்பானி, தன் 30வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள தன் பூர்வீக ஊரான ஜாம்நகரில் இருந்து துவாரகாவுக்கு ஆன்மிக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். பணக்கார குடும்பத்தின் வாரிசான அனந்த் அம்பானி, கடவுளின் அருளைப் பெற இந்த வழியை தேர்வு செய்துள்ளார்.ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, மிகுந்த பக்தியுடன் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர். நாட்டில் உள்ள பிரபல ஆன்மிக தலங்களான பத்ரிநாத், கேதார்நாத் போன்றவற்றுக்கு செல்வதை, அவர் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவிலும் பங்கேற்று புனித நீராடினார்.உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ரிலையன்ஸ், நாட்டின் மிகப்பெரிய புதிய பசுமை எரிசக்தி திட்டங்கள் ஆகியவற்றை அனந்த் அம்பானி கவனித்து வருகிறார். இவை தவிர, வந்தாரா விலங்கு சரணாலயத்தை நிறுவி உள்ளார். இது, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.ரிலையன்சின் முக்கிய தொழில்களை கவனித்து வரும் அதே வேளையில், ஆன்மிக பாரம்பரியத்தையும் பின்பற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அனந்த் அம்பானி, குஜராத்தில் உள்ள தன் பூர்வீக ஊரான ஜாம்நகரில் இருந்து துவாரகாவுக்கு 170 கி.மீ., பாதயாத்திரையை துவங்கி உள்ளார்.கடந்த மார்ச் 29ல் துவங்கப்பட்ட இந்த பாதயாத்திரையை, தன் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக, வரும் 8ம் தேதி துவாரகாவில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, தினமும் ஏழு மணி நேரம் இரவு துவங்கி அதிகாலை வரை, 20 கி.மீ., துாரம் நடக்கிறார். இந்த பாதயாத்திரையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பொதுமக்களும் அவருடன் பங்கேற்று வருகின்றனர். பாதயாத்திரையின் போது, சிலர் அனந்த் அம்பானியிடம் துவாரகாதீஷின் புகைப்படங்களை பரிசாக அளித்தனர்; பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.மேலும் இந்த பாதயாத்திரையில் அனந்த் அம்பானி, ஹனுமன் சாலிசா, சுந்தர காண்டம், தேவி ஸ்தோத்திரம் ஆகியவற்றை உச்சரித்தபடி செல்கிறார்.உடல் பருமன், ஆஸ்துமா, நுரையீரல் நோய் போன்ற பிரச்னைகளை பொருட்படுத்தாமல், அனந்த் அம்பானி இந்த கடினமான பாத யாத்திரை மேற்கொண்டுள்ளது, அனைத்து தரப்பினரிடையே பரவ லான பாராட்டுகளை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kundalakesi
ஏப் 06, 2025 16:52

ஸ்வாமி அருள் கிடைக்கும்


Ramesh Trichy
ஏப் 06, 2025 16:38

Today, he has already completed the planned journey and reached Dwarka


Mediagoons
ஏப் 06, 2025 10:44

ஏமாற்றும் நாடகம்


Srinivasan Krishnamoorthy
ஏப் 06, 2025 11:56

what is your problem, he is not cheating like stalin or rahul pappu. he has not cheated any. They employment for lakhs of people and pay several thousand crores as tax. what do politicians do ?


Pandi Muni
ஏப் 06, 2025 15:23

திராவிட நாடகம் மாதிரியா தெரியிது பதரே


பெரிய குத்தூசி
ஏப் 06, 2025 09:38

ஜெய் கிருஷ்ணா ஆனந்த் ஜி. பாரதம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. கடவுளர் ஆளும் நாடு. பாரதத்தை நேசிக்கும் ஒவொருவருக்கும் கடவுள் அருள் பாலிப்பார். அம்பானி நிறுவனத்தால் சுமார் 7 லட்சம் இந்தியர்களுக்கு வேலை உள்ளது, அத்தனை நிறுவனம் சுமார் 13 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை இந்தியாவிலும், வெளிநாட்டில் 160000 நபர்களுக்கும் வேலை வாய்ப்பை அளித்து குடும்ப விளக்கை ஏற்படுத்தியுள்ளார்கள். TATA குரூப் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் 30 லட்சம் இந்திய குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. அம்பானி, அதானி, டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் வருடத்திற்கு 2 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியாவுக்கு கொண்டு வருகிறார்கள். முதுகெலும்புகள். 200 க்கும், குவாட்டருக்கும் மயங்கும் பிரிவினைவாத திராவிட சொம்புக்கும், இஸ்லாமிய தீவிரவாதத்தை நிலைநிறுத்தும் காங்கிரஸ் அடிபொடிகளுக்கும் இது தெரிய வாய்ப்பில்லை. ஜைஹிந்த்


UNMAIYA SONNEN
ஏப் 06, 2025 09:23

Manam pol Vazhkai Malarattum.. Let's not hate speech anyone


Sampath Kumar
ஏப் 06, 2025 09:11

ஏம்புட்டு தூரம் நடந்தாலும் உன் உடம்பு இளைக்காது


M R Radha
ஏப் 06, 2025 07:47

நம்ம சைக்கோவும் பாத/பாவ யாத்ர போனாரே அர கிலோமீட்டரே சென்று வயிறு முட்ட சாப்டுட்டு அர நாள் ஏ சி கேரவேன்ல நித்ர அடிச்சிட்டு மறுபடியும் ஓர் கிமீ நடக்க வேண்டியது. கருமம் பிடித்தவர்


Kasimani Baskaran
ஏப் 06, 2025 07:21

பகவான் கிருஷ்ணரின் அருள் கிட்டட்டும்..


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 06, 2025 06:45

இவன் யாத்திரை போனால் என்ன, குப்புற படுத்து தூங்கினால் என்ன? இதெல்லாம் ஒரு செய்தி. நேற்று பிராய்லர் கோழியுடன் ஒரு செய்தி. இவனுக்கு தேவையற்ற விளம்பரம் நடக்கிறது. உயிர் பயம் வந்துவிட்டது போல தெரிகிறது.


ராஜ்
ஏப் 06, 2025 10:50

ஆமாங்க நம்ம விடியல் சார் சைக்கிள் ஓட்டுவது பார்க்கில் நடப்பது மட்டுமே திராவிட ஆளுங்களுக்கு கண்கொள்ளா காட்சி


Raj
ஏப் 06, 2025 06:23

வீட்டிலிருந்து நடைப்பயற்சி செய்தால் போதாதா? ஏன் இந்த விபரீத விளையாட்டு.


முக்கிய வீடியோ