உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழங்கால இந்தியர்கள் கலாசாரம் அறிவியலை பரப்பினர்: மோகன் பகவத் பேச்சு

பழங்கால இந்தியர்கள் கலாசாரம் அறிவியலை பரப்பினர்: மோகன் பகவத் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பழங்கால இந்தியர்கள் மெக்சிகோ முதல் சைபீரியா வரை பயணித்து அறிவியல் மற்றும் கலாசாரம் குறித்து கற்பித்தனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது: நமது முன்னோர்கள் மெக்சிகோ முதல் சைபிரீயா வரை பயணித்தனர். அப்போது உலகிற்கு அறிவியல் மற்றும் கலாசாரம் குறித்து கற்பித்தனர். அவர்கள் மதம் மாற்றவில்லை. அல்லது மதத்தை திணிக்கவில்லை. நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமைக்கான செய்தியுடன் பயணித்தோம்.பல படையெடுப்பாளர்கள் வந்து நம்மிடம் கொள்ளையடித்தனர். நம்மை அடிமைப்படுத்தினர். கடைசியாக வந்தவர்கள் நமது மனங்களை கொள்ளையடிக்க வந்தனர். நமது பலத்தையும், உலகிற்கு என்ன பகிர்ந்தோம் என்பதையும் நாம் மறந்துவிட்டோம். ஆன்மிக அறிவு இன்னும் செழித்து வளர்கிறது. நம்மிடம், அறிவியல் மற்றும் ஆயுதங்கள், வலிமை மற்றும் சக்தி, நம்பிக்கை மற்றும் அறிவு உள்ளது.இந்திய அறிவியல் அமைப்பை தான் நாம் படிக்க வேண்டும். மெக்காலே கல்விமுறையை அல்ல. நமது அறிவுத்திறனின் அடித்தளம் அந்தக் கல்வி முறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் காலனித்துவப்படுத்தப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறது. உடலாலும், மூதாதையர்களாலும் இந்தியர். ஆனால், இதயம் மற்றும் மனதால் வெளிநாட்டினர். ஒரே வித்தியாசம் நாம் எந்த அளவுக்கு இருக்கிறோம் என்பது தான். இப்போது நாம் அதில் இருந்து முற்றிலும் விலக வேண்டும். அதிர்ஷ்டவசமாக மேற்கத்திய நாடுகளின் மேம்பட்ட அறிவியல் நாம் கூறுவதை உறுதிப்படுத்தும் ஒரு நிலையை அடைந்துள்ளது.இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Iyer
அக் 20, 2025 05:33

ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை. இப்போது மத்தியிலும் - பெரும்பாலான ராஜ்யங்களிலும் - உங்கள் அரசு தானே ஆட்சியில் உள்ளது ஏன் நீங்கள் குருகுலம் கல்வி முறையை திரும்ப உயிர்ப்பிக்கக்கூடாது ?? ஏன் பள்ளியில் கல்லூரிகளில் யோகா, த்யானம், பிராணாயாமம் கட்டாயப்படம் ஆக்கக்கூடாது ?


அப்பாவி
அக் 20, 2025 04:33

மகாபாரதத்தில்.இல்லாத அறிவியலே இல்லை. சூரியனும் சந்திரனும் சேர்ந்து வந்தால் அமாவாசை. கிருஷ்ணர் என்னிக்கும் இல்லாம ஒரு நாளில் தர்ப்பணம் பண்ணினாராம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இன்னிக்கி அமாவாசை இல்லியே ஏன் கிருஷ்ணர் தர்ப்பணம்.பண்றாருன்னு அவரையே கேப்போம்னு குருக்ஷேத்திரத்திற்கு வந்தார்களாம். நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து வந்ததால் இன்னிக்கி அமாவாசை அதான் தர்ப்பணம்நு சொன்னாராம். வியாச பாரதத்தில் இருக்கு. அறிவியல்.


Nagercoil Suresh
அக் 20, 2025 01:03

தற்போதய நிலையும் அதே தான். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கத்திய நாடுகளில் இருந்த கலாச்சாரம் வேறு தற்போதய நிலை வேறு இதற்கு முழு வெகுமதியும் இந்தியர்களையே சாரும்... மனிதர்களுக்கும் மிருகங்கள் மற்றும் சில பறவைகளுக்கும் வித்தியாசம் இல்லாததை போல் வாழ்ந்துகொ ண்டிருந்தார்கள் சிலர் அவர்களை மாத்தி மனிதர்கள் இப்படி தான் வாழணும் பொது இடங்களில் இப்படி தான் செயல்படனும் என வாழ்ந்து காட்டியவர்கள் இந்தியர்கள்..அதே நேரம் தற்போது ஒரு சிலர் இந்தியாவிலிருந்துகொண்டு மேற்கத்திய கலாச்சாரம் என கூவிக்கொண்டு கேவலமாக பொது வெளியிலும் வெல்வேறு சோசியல் மீடியாக்களிலும் பணத்திற்காக நம்முடைய கலாச்சாரத்தை விற்கிறார்கள் அவ்வாறு செயல்படுபவர்களை மீடியாக்கள் ஆதரிக்காமல் வேரறுக்க வேண்டும்....


மணிமுருகன்
அக் 19, 2025 23:02

உண்மை முதல் நூற்றாண்டுகளிலேயே அரபியர்கள் நம் முன்னோரிடமிருந்து அறிவியல் விஞ்ஞானம் அறிய வந்துள்ளனர் அறிவை தான் வளர்த்துள்ளோம் மதத்தை அல்ல இன்று வரை அதே கோட்பாடு தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை