உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ரூ.2,000 கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதலுக்கு ராணுவம் ஒப்பந்தம்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ரூ.2,000 கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதலுக்கு ராணுவம் ஒப்பந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tadzssof&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், ரூ.1,981 கோடியில் ஆயுதம் கொள்முதல் செய்ய, 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமா,க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது வாங்கப்பட்ட ஆயுதங்கள் விவரம் பின்வருமாறு:* எதிரி ட்ரோன்களை துல்லியமாக அழிக்கும் ஆயுதங்கள்.* குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள் (LLLR).* மிக குறுகிய இடத்தில் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள்.*குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள்* இரவிலும் பார்வையிடும் திறன் கொண்ட கருவிகள்* பாலஸ்டிக் ஹெல்மெட்* வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு வகையான ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Yasararafath
ஜூன் 24, 2025 14:49

இந்தியா பல அனு ஆயுதங்கள் ஒப்பந்தங்கள் செய்யனும்


sundarsvpr
ஜூன் 24, 2025 13:20

பயங்கரவாத எதிர்ப்பு என்பது சரியாக கணிக்கப்படவேண்டும். மதவெறித்தனம் பயங்கரவாதம். இதில் தீவிரம் காட்டுவது முஸ்லீம் மதம். ஐரோப்பியநாடுகளில் வேகமாக முஸ்லீம் மதம் பரவிவருகிறது. அடுத்த நூற்றாண்டில் முஸ்லீம் அல்லாத நபர்களை எண்ணிவிடலாம். இந்த நிலையை மாற்றிட ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து செயல்படவேண்டும். தன்னை தானே காப்பாற்றிக்கொள்வது ஆன்மீக வைராக்யம்தான்.


Tirunelveliகாரன்
ஜூன் 24, 2025 15:26

//ஐரோப்பியநாடுகளில் வேகமாக முஸ்லீம் மதம் பரவிவருகிறது. அடுத்த நூற்றாண்டில் முஸ்லீம் அல்லாத நபர்களை எண்ணிவிடலாம். // அப்படி என்ன இருக்கு அந்த மதத்தில்? இதெல்லாம் உங்கள் கற்பனை


Kumar Kumzi
ஜூன் 24, 2025 18:09

பரவவில்லை அகதிகளின் போர்வையில் குடியேற்றப்படுகிறார்கள்


AZAGU SARAVANAN
ஜூன் 24, 2025 13:00

ALL IN MAKE IN INDIA OR USA?


Suppan
ஜூன் 24, 2025 16:29

செய்திகளை நன்றாகப்படியுங்கள். ராணுவம் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் பாரஸ் டிபன்ஸ் , எல்லா கப்பல் கட்டும் நிறுவனங்கள் கொச்சின் , மஸகான் கார்டன் ரீச் . டயனமாடிக் டெக்னாலஜிஸ் , பாரத் எலக்ட்ரானிக்ஸ் , சோலார் இண்டஸ்ட்ரீஸ் , டாட்டா பெட்டர்ன் , ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற பல இந்திய நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. அவைகளின் பங்குகளின் விலை எகிறி உள்ளன. இவைகளின் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரித்துள்ளன .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை