உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் டங்ஸ்டன் திட்டம் வராது; நாளை அறிவிப்பு வெளிவரும்: அண்ணாமலை

தமிழகத்தில் டங்ஸ்டன் திட்டம் வராது; நாளை அறிவிப்பு வெளிவரும்: அண்ணாமலை

புதுடில்லி: டங்ஸ்டன சுரங்கத் திட்டத்தை கைவிடுமாறு டில்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த போராட்டக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 'நாளை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்', என்று தெரிவித்தார். மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hchg5oxk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரத்தில் பா.ஜ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.,வின் மாநில தலைவர் அண்ணாமலை, கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினார். இதன் ஒரு பகுதியாக, டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டில்லி சென்றுள்ளனர். இது குறித்து நேற்று (ஜன.,21) பேசிய அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க இருப்பதாகவும், நாளை (இன்று) மகிழ்ச்சியான செய்தி வரும் என்று கூறினார். இந்த நிலையில், மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை அண்ணாமலை தலைமையிலான போராட்டக்குழுவினர் டில்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்திய அமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: 2021ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, அரிட்டாபட்டியில் தான் டங்ஸ்டன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. எந்த சுரங்கத்தினாலும் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரப்போவதில்லை. மாவட்டத்திற்கு டி.எம்.எப்., எனப்படும் கனிம நிதி மட்டும் கிடைக்கும். பிரதமர் மோடி மக்களின் நண்பனாகத் தான் இருந்துள்ளார். நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு அரசியல் கட்சியை குறை சொல்ல விரும்பவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசிடம் கேட்டது. அதற்கு அவர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அனுமதி கொடுத்தார்கள். பிரதமர் மோடி, விவசாயிகள் மற்றும் தமிழக மக்களுடன் நிற்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். டங்ஸ்டன் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதால் தான், நாளை அறிவிப்பு வரும் என்று கூறினேன். தமிழகத்தில் டங்ஸ்டன் திட்டம் வராது. 4,981 ஏக்கரில் சுரங்கம் வராது என்று மக்களுக்கு உறுதிமொழி கொடுத்ததை பா.ஜ., காப்பாற்றியுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
ஜன 22, 2025 20:17

அண்ணாமலை தவறான தகவல்களை தரக்கூடாது. டங்ஸ்டன் திட்டம் கண்டிப்பாக மதுரைக்கு கிடைக்கும். இது தான் அந்த இனிப்பான செய்தி. மதுரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:43

அதென்ன ப்ராப்பர் சேனல் மூலமாக அல்லாமல் உங்களுக்கு மட்டும் விஷயம் தெரியுது அண்ணாமலை? நீங்கள் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரா? அல்லது இதைப்பற்றி அறிவிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள உயரதிகாரியா ????


அப்பாவி
ஜன 22, 2025 19:31

அனுமதி குடுத்தா அங்கே வாழும்.மக்களை வெளியேற்ற கார்பரேட்கள் வந்ந்துருவாங்க. கொழிப்பாங்க. வெளியேறினவங்களுக்கு வேலை கேரண்ட்டி தரமுடியுமா? இல்லேன்னா சதுர அடிக்கு இத்தனைன்னு மாச வாடகை தர ரெடியா? இல்லே நூறு வருஷத்துக்கு லீஸ் எடுத்துப்பாங்களா?


அப்பாவி
ஜன 22, 2025 18:39

இதுதான் நல்ல செய்தியா? இதைச் சொல்றதுக்குத்தான் இங்கிருந்து பறந்து டில்லி போனாரா?


S. Venugopal
ஜன 22, 2025 18:33

இந்தியா 2022ல் மட்டுமே சுமார் 1.9 மில்லியன் டாலருக்கு டங்ஸ்டன் தாதுவினை இறக்குமதி செய்துள்ளது. நமது நாட்டில் தற்காலங்களில் எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் அதிக அளவு பெருகுகின்ற காரணங்களால் டங்ஸ்டனின் தேவைகள் மிகவும் அதிகம் ஒரு கிலோ டங்ஸ்டனின் விலை சுமார் ஒரு லக்ஷம் ரூபாய். நமது நாட்டில் ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே தற்பொழுது டங்ஸ்டன் உற்பத்தி செய்யப்படுகிறது தற்பொழுது நமது நாட்டின் உணவுப்பபொருட்களின் உற்பத்தி தேவைக்கு மேல சுமார் 2 லிருந்து 3 மடங்காக உள்ளது. நமது நாட்டில் விவசாயத்தில் மிகவும் அதிக அளவு சுமார் 70 சதவிகிதத்துக்கு மேலாக மக்கள் ஈடுபபடடுகிறர்க்கிகள். வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்தில் 13 சதவிகித மக்கள் மட்டுமே ஈடுபடடுகிறர்க்கிகள். தமிழ் நாட்டின் விவசாயம் பருவ மழையினை நம்பியே உள்ளது. தமிழ் நாட்டில் எந்தவித ஜீவ நதிகள் இல்லை நிலத்தடி நீரும் இல்லை. நாம் அதிக அளவில் டங்ஸ்டன் இறக்குமதி செய்யப்ப்படும் நாடு நம்மை விட மிகவும் சிறிய நாடான நெதர்லேண்ட். தயவுசெய்து சிந்தியுங்கள்


Amsi Ramesh
ஜன 22, 2025 17:21

சொன்னதை செய்வோம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை