உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திமுக விளம்பர நாடகங்களுக்கு அரசுப்பள்ளிகள் பலிகடா: அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக விளம்பர நாடகங்களுக்கு அரசுப்பள்ளிகள் பலிகடா: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4zv0wbbb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி நடத்த, ஊரை அடித்து உலையில் போட்டிருக்கும் திமுகவினருக்குச் சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு.திமுகவின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

M Ramachandran
செப் 10, 2025 21:33

அவர்களுக்கு இடம் பொருள் ஏவல் எல்லாம் கிடையாது.


M Ramachandran
செப் 10, 2025 21:11

அவர்கள் வாழ யாரையும் பலி கொடுக்க தயங்க மாட்டார்கள். அது அவர்களின் தலையாய கொள்கை. முடிந்த வரை மக்கள் சொத்தையையும் அரசு கஜானாவையையும் முடிந்த மட்டும் கொள்ளையடி அது அவர்களின் அடுத்த முக்கிய கொள்கை. பிறகு செய்த குற்ற செயலிலிருந்து சிறை செல்வதை தடுக்க தப்ப நீதியை விலைக்கு வாங்கு.அப்பனுடைய அப்பன் விஞ்ஞான ஊழல் வாதி என்ற நீதி அரசால் பட்டம் வழங்க பட்டது.அப்பன் நீதி துறையைவிலைக்கு வாங்க கொள்ளையடித்த பணத்தை உபயோக படுத்தி இருப்பது இது வரை எங்கும் நடக்காதது.


Sun
செப் 10, 2025 19:03

என்னங்கண்ணா ? உங்களுக்கு என்ன செலக்டிவ் அம்னீசியாவா? நேற்று தான் தி.மு.கவுக்கு எதிராக எதிர்ப்பு அலை ஏதும் இல்லை தி.மு.க தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்கிற மாதிரி பேசினீர்கள் .இன்று 2026 ல் தி.மு.க ஆட்சி அகற்றப்படும் எனப் பேசுகிறீர்கள் .முதலில் ஒரு நல்ல மன நல மருத்துவரைப் போய் பாருங்க அண்ணா!


Karthik
செப் 10, 2025 19:22

ஆட்சிக்காரனுங்க இன்றைக்குத்தானா இந்த விளம்பர அக்கப்போரை செஞ்சிருக்கானுங்க. மாணவர்கள் மீது உண்மையான அக்கறை இருப்பதால்தான் இன்றைக்கு அண்ணாமலை அப்படி பேசியிருக்கிறார்.


D.Ambujavalli
செப் 10, 2025 18:34

ஏன், அதே ஊரிலோ, சுற்றுப்புறத்திலோ உள்ளூர் திமுக பிரமுகர் தனது பள்ளியை இந்த பிரசாரத்துக்கு கொடுப்பாரா ?கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் கொட்டி அழும் பெற்றோர்கள் சும்மா விடுவார்களா? ஏழை பாழைகளின் பிள்ளைகள்தானே , படிப்பு போனால் என்ன, இதுபோலவே ஒவ்வொரு கூட்டத்துக்கும் பள்ளி மாணவர்களின் வேலை நாட்களைத் திருடிக்கொண்டால் போச்சு


RAAJ68
செப் 10, 2025 17:14

இவர் திமுக ஆதரவு கொள்கை உடையவர். நேற்று பேசினார் திமுகவுக்கு அப்படி ஒன்றும் எதிர்ப்பு அலை இல்லை அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்று. எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு திமுகவுக்கு ஆதரவாக பேசும் இவரை எப்படி நம்புவது என்று புரியவில்லை. அவ்வப்போது திமுகவை திட்டுவது போன்று ஒரு நாடகம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 10, 2025 16:11

கல்வியின் மீது திமுக செய்யும் தாக்குதல். இது போன்று அரசு பள்ளிகளை சரிவர நடக்காவிட்டால் மக்கள் எப்படியாவது தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆவலில் தனியார் பள்ளிகளில் சேர்ப்பார்கள். கட்டணம் எவ்வளவு இருந்தாலும் கடினமாக அப்பா அம்மா உழைத்து கிடைக்கிற வேலையை செய்து ஊதியம் குறைவாக கிடைத்தாலும் பணி செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பார்கள். பல தனியார் பள்ளிகள் கல்லூரிகள் திமுக ஆதரவு பள்ளி கல்லூரிகள் என்பதால் திமுகவினற்கு இலாபம் தான். மேலும் மக்கள் இது போன்று கஷ்டப் பட்டு செய்யும் பணிக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் ஊதியத்திற்கு பணி செய்வதால் பல தொழிற்சாலைகள் இலாபம் அதிகம் கண்டு தொழிலை விரிவு படுத்துவார்கள். அப்போது திமுக இந்தியா விலேயே முதன்மை மாநிலம் என்று ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளும். ஆக ஒரே கல்லில் பல மாங்காய்.


Priyan Vadanad
செப் 10, 2025 16:08

ஆக்க்ஷன் கிங் அர்ஜுன்: பொறாமை ஜோக்கர் வடிவேலு: லைட்டா


vivek
செப் 10, 2025 16:38

நடுவில் ஊசி போன பிரியன் வடை. ... சூப்பர்


மாபாதகன்
செப் 10, 2025 16:58

வாயாலே வடை சுடுவார் ?? மோடி??


Palanisamy T
செப் 10, 2025 16:04

அண்ணாமலை அவர்களின் குற்றச் சாட்டில் உண்மையுள்ளது நியாயமும் உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கலாச்சாரத்தை சித்தாந்தத்தை பள்ளியின் வளாகத்திற்குள் கொண்டுசெல்லக்கூடாது. பள்ளிகள் இயங்குவது மக்களின் வரிப் பணத்தில். அரசியல் கட்சிகளின் சொந்தப் பணத்தில் இல்லை. இதை மக்களும் உணரவேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் அறிந்துக் கொள்ளவேண்டும். பள்ளியின் புனிதத் தன்மையை அனைவரும் காப்பாற்ற வேண்டும்.


Kasimani Baskaran
செப் 10, 2025 15:54

திராவிட ஒழிப்பு தொகுப்பு ஒன்றோ இரண்டோ யார் குறுக்கே வந்தாலும் ஜோராக நடக்கவேண்டும். அதுதான் தமிழகத்துக்கு நல்லது. தமிழன் மீது ஒட்டப்பட்டு இருக்கும் திராவிட ஸ்டிக்கர் நீக்கப்படுவது மிக முக்கியம்.


மாபாதகன்
செப் 10, 2025 16:59

சூரியன் இல்லாமல் விடியாது.


Karthik
செப் 10, 2025 19:24

சூரியன்னு பேரு வைச்சிக்கிட்டவங்க எல்லாம் விடியலை தந்துவிட முடியாது.


Vasan
செப் 10, 2025 15:26

Yes, schools should not be disturbed for the dirty politics.


புதிய வீடியோ