என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? ஷோபாவுக்கு சோமசேகர் சவால்!
பெங்களூரு; பா.ஜ., -- எம்.எல்.ஏ., சோமசேகர், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:பா.ஜ.,வில் இருந்த யோகேஸ்வருக்கு அநீதி நடந்தது. அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு ஆதரவாக சென்னபட்டணாவில் நான் பிரசாரம் செய்தேன். இதில் என்ன தவறு உள்ளது.தைரியம் இருந்தால் பா.ஜ., - -எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் இருந்து போட்டியிடும்படி மத்திய இணை அமைச்சர் ஷோபா எனக்கு சவால் விடுகிறார்.நான் அவருக்கு, பதில் சவால் விடுகிறேன். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும். நானும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். யஷ்வந்த்பூர் தொகுதியில் எனக்கு எதிராக போட்டியிட அவர் தயாரா.லோக்சபா தேர்தலில், பெங்களூரு வடக்கு தொகுதியில் அவரது முகத்தை பார்த்து யாரும் ஓட்டு போடவில்லை. சிக்கமகளூரு மக்கள், அங்கிருந்து அவரை விரட்டி அடித்தனர்.அமைச்சர் ஜமீரின் கருத்தால் ஒக்கலிக சமூக ஓட்டுகள் பிரிந்து சென்றதாக, யோகேஸ்வர் கூறியுள்ளார். எனக்கு தெரிந்து அவர் வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.