பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற பள்ளி முதல்வர் கைது குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்
ஆமதாபாத், குஜராத்தில் அரசு பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்த 6 வயது சிறுமி இறந்தது தொடர்பான வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பள்ளியின் முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது சிறுமி அலறியதால், வாயை பொத்தி அவர் கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.குஜராத்தில் தாஹோத் மாவட்டத்தின் சிங்வாத் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.அதிர்ச்சிகடந்த 19ம் தேதி, அந்த சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது தாய் வீட்டின் வெளியில் காத்திருந்தார். அவ்வழியே காரில் சென்ற பள்ளி முதல்வர் கோவிந்த், சிறுமியை ஏற்றிச் சென்றார்.மாலை பள்ளி நேரம் முடிந்தும், சிறுமி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் விசாரித்தனர். அப்போது சிறுமியின் வகுப்பாசிரியர், 'இன்று உங்கள் மகள் பள்ளிக்கு வரவில்லை' என கூறியதால் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, பள்ளி முதல்வரிடம் விசாரித்தனர். அவர், சிறுமியை காலையிலேயே பள்ளியில் இறக்கி விட்டு, வேறு வேலை இருந்ததால் வெளியில் சென்று விட்டதாக கூறினார்.இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பள்ளி வளாகத்தில் தேடியபோது, ஓரிடத்தில் தங்கள் மகள் கிடப்பதை பார்த்தனர்.அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் சிறுமி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.பிரதே பரிசோதனை அறிக்கையில், சிறுமி மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கோவிந்த்நாத் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.ஒப்புதல்அவரது மொபைல் போன் சிக்னலையை வைத்து, சம்பவம் நடந்த அன்று அவர் எங்கிருந்தார் என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், பள்ளி வளாகத்தில் அவர் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், காரில் வரும்போதே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, கொலை செய்து காரிலேயே சுற்றி விட்டு பள்ளி வளாகத்தில் உடலை போட்டதாக ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, கோவிந்த்நாத் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.