வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த வருடம் western disturbance எனப்படும் மேற்கத்திய கலக்கம் அதிகமாக இருக்கும். எனவே செயற்கை மழை தேவைப்படாது.
விக்ரம்நகர்:“தேசிய தலைநகரில் அக்டோபர் 7 மற்றும் 9ம் தேதிக்கு இடையே வடமேற்கு டில்லியில் செயற்கை மழை சோதனை நடைபெறும்,” என, மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார். தேசிய தலைநகரின் மிக முக்கிய பிரச்னை, காற்று மாசுபாடு. இதை கட்டுப்படுத்தும் விதமாக செயற்கை மழை பெய்விக்கும் நடவடிக்கையை மாநில அரசு கையிலெடுத்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இதற்காக கான்பூர் ஐ.ஐ.டி., உடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ரேகா குப்தா மற்றும் மாநில சுற்றுச் சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத் தானது. அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிர்சா பேசியதாவது: தேசிய தலைநகரின் வடமேற்கு பகுதியில் முதல் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அக்டோபர் 7 மற்றும் 9ம் தேதிக்கு இடையில் இந்த சோதனை நடத்தப்படும். அடுத்த இரண்டு மாதங்களில் ஐந்து சோதனைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து அனுமதிகளையும் அரசாங்கம் பெற்றுள்ளது. இதற்காக 3.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனைக்கு பிறகு அதன் விளைவுகள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம். வழிகாட்டுதல்கள் மாசுபாட்டை குறைப்பதற்கான அனைத்து விதமான சாத்தியக்கூறுகள் குறித்தும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது. கான்பூர் ஐ.ஐ.டி., உடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், வரலாற்று சிறப்புமிக்கதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார் . டில்லியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செயற்கை மழை பொழிவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கான்பூர் ஐ.ஐ.டி.,க்கு நேற்று முன்தினம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக இயக்குநரகம் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்திற்காக 'செஸ்னா 206- எச்' என்ற விமானம் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த வருடம் western disturbance எனப்படும் மேற்கத்திய கலக்கம் அதிகமாக இருக்கும். எனவே செயற்கை மழை தேவைப்படாது.