உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமின் வழங்கிய அடுத்த நாளே நிறுத்திவைப்பு: டில்லி ஐகோர்ட் உத்தரவால் கெஜ்ரிவால் ஷாக்

ஜாமின் வழங்கிய அடுத்த நாளே நிறுத்திவைப்பு: டில்லி ஐகோர்ட் உத்தரவால் கெஜ்ரிவால் ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று (ஜூன் 20) ஜாமின் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த வழக்கில், டில்லி உயர்நீதிமன்றம் ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக மார்ச் 21ம் தேதி டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னதாக கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்சிங் மூலம் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ryzqgnc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஜாமின் மனு, நேற்று (ஜூன் 20) விடுமுறை கால அமர்வு நீதிபதி நியாய் பிந்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியும், ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று, அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

நிறுத்தி வைப்பு

இதனை அவசர வழக்காக இன்று விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதிர்குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர துடேஜா அமர்வு, கெஜ்ரிவாலுக்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அமலாக்கத்துறை தனது மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று விடுமுறைக்கால அமர்வு முன்பு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை ஜாமின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Naidruv Kashyap
ஜூன் 22, 2024 19:50

தாமரை வெளுக்க ஆரம்பித்திருக்கு


NAGARAJAN
ஜூன் 22, 2024 15:08

ஏதோ இந்த பாஜகவினர் யோக்கிய சிகாமணிகள் போல. அமலாக்கத்துறை ஒன்றும் யோக்கியமான துறை அல்லவே. . இவர்களின் லட்சனம் தெரியாதா. .


Azar Mufeen
ஜூன் 22, 2024 11:16

அமலாக்கத்துறை,வீரியம் எடுக்காது, தரமான கல்வியை கொடுத்த கெஜ்ரிவால் முன்னேதான் வீரியம்


ganapathy
ஜூன் 21, 2024 20:19

தில்லி முதல்வருக்கு ஜெயிலுக்கு போவதும் பெயில்ல வெளியே வருவதும் இப்பல்லாம் மிகவும் சாதாரண விஷயமாகியுள்ளது. தில்லி வாசிகளுக்கு இது மிக மிக வெடகக்கேடனான விஷயமாகும்


M Ramachandran
ஜூன் 21, 2024 19:58

என்னடா இது நம்ம தில்லு முல்லு ஜம்பம் சாயமாட்டேண்னுது


தாமரை மலர்கிறது
ஜூன் 21, 2024 19:25

ஒரு நாள் ஜாமீன் கொடுத்து அடுத்த நாள் ரத்து செய்வது, கெஜ்ரியை மனஉளைச்சலில் தள்ளும். கண்ணை கொடுத்து கண்ணை எடுப்பது போன்றது. கெஜ்ரியை இப்படித்தான் தெளியவைத்து தெளியவைத்து அடிக்க வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 21, 2024 19:09

பத்து ரூவா பாலாஜியும் கெஜ்ரியும் ஒரே ஜெயிலில் போட்டால், ஜிகிரி தோஸ்த்துக்களாக மாற வாய்ப்புள்ளது.


M Ramachandran
ஜூன் 21, 2024 19:01

உப்பு றிய தின்னுட்டான் கோ. நல்ல தண்ணி கிடைக்கல உப்பு தண்ணி தான் கிடைய்யகுதுங்க. அடுத்த கள்ள சாராய கேசு


Krishna Gurumoorthy
ஜூன் 21, 2024 18:41

முதல் முறையாக வேகமாக செயல் திறனை காண்பித்து இருக்கிறது ஈடி


Raj S
ஜூன் 21, 2024 18:30

நீதிமன்றங்கள் கடுமையாக மாறவேண்டும்... முதலில் குடுத்த தீர்ப்பை நிறுத்தினால் என்ன காரணம் என்று சொல்ல வேண்டும்.... மற்றும் முதலில் குடுத்த தீர்ப்பு தவறு என்றால் அதை கொடுத்தவர்களிடம் தன்னிலை விளக்கம் குடுக்க சொல்ல வேண்டும்... முதல் முறை மட்டும்... அடுத்த முறையில் இருந்து அப்படி கொடுப்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்... இல்லையென்றால், திருட்டு திராவிடர்கள் போன்றோரின் அடி வருடிகள் நிறைய பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள்...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை