உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நோபல் பரிசுக்கு தகுதி இருக்கிறது என்கிறார் கெஜ்ரிவால்; ஊழல் செய்வதற்கு கொடுப்பதில்லை என பா.ஜ., விமர்சனம்

நோபல் பரிசுக்கு தகுதி இருக்கிறது என்கிறார் கெஜ்ரிவால்; ஊழல் செய்வதற்கு கொடுப்பதில்லை என பா.ஜ., விமர்சனம்

புதுடில்லி: 'தடைகள் இருந்த போதும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தியதால், ஆளுமைக்கான நோபல் பரிசு எனக்கு வழங்க வேண்டும்' என டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதற்கு, 'திறமையின்மை, அராஜகம் மற்றும் ஊழல் ஆகிய பிரிவுகள் இருந்திருந்தால், அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசு கிடைத்திருக்கும்' என பா.ஜ., விமர்சித்துள்ளது.பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் நடந்த, 'தி கெஜ்ரிவால் மாடல்' என்ற தலைப்பிலான பஞ்சாபி புத்தக வெளியீட்டு விழாவில், டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப் பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ga2rrtz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியில் தனது அரசாங்கத்தின் பணிகளைத் தடுக்க பலமுறை முயற்சித்த போதிலும், தனது நிர்வாகம் திறம்பட செயல்பட்டது. வேலை செய்ய விடாமல் தடுக்கப்பட்ட போதிலும், நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். துணைநிலை கவர்னர் மற்றும் பல்வேறு சிரமங்கள் இருந்த போதிலும், சிறப்பாக செயல்பட்டதற்காக, எனக்கு ஆளுகை மற்றும் நிர்வாகத்திற்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பா.ஜ., கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.இது குறித்து, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று கெஜ்ரிவால் கோருவது நகைப்புக்குரியது. திறமையின்மை, அராஜகம் மற்றும் ஊழல் ஆகிய பிரிவுகள் இருந்திருந்தால், அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசு கிடைத்திருக்கும். ஊழல் செய்வதற்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்பை தொடர்ந்து கெஜ்ரி.,!

'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்' என கூறி வருகிறார். அதேநேரத்தில் அவர், 'தான் எவ்வளவு செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது' என்று அதிருப்தியை கொட்டி தீர்த்து இருந்தார். தற்போது அந்த வரிசையில் டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தனக்கு ஆளுமைக்கான நோபல் பரிசு வேண்டும் என தம்பட்டம் அடித்து உள்ளார். கெஜ்ரிவாலின் இந்த கருத்து டில்லி அரசியலில் பரபரப்பான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sridhar
ஜூலை 10, 2025 13:12

என்ன ஒரு தைரியமும் திமிரும் இருந்திருந்தால் இந்த பிராடு இப்படி பேசியிருப்பார்? கிடைச்ச கேப்புல எல்லாம் ஊழல் செஞ்சு அதுல மாட்டிகிட்டப்புறகும் ஒண்ணுமே நடக்காத மாதிரி பாவலா பண்றதெல்லாம் கருணாநிதி லெவல் ஆனா, இவர நம்பியும் 42% மக்கள் வோட்டு போட்டுருக்காங்களே, அந்த தைரியத்தில பேசுறாரோ? மக்கள் திருத்தலேன்னா நமக்கு கிடைக்க போறது கருணாநிதி குடும்பமும் கெஜ்ரிவால் போன்ற பிராடுகளும்தான்


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 12:25

ஐஐடி படிப்பு சீட் கூட நுழைவுத்தேர்வே எழுதாமல் குறுக்கு வழியில் பெற்றவர். நோபல் பரிசையும் அதுபோலவே முயற்சித்துப் பெறலாம்.


seshadri
ஜூலை 10, 2025 12:20

ஊழலுக்கு நோபல் பரிசு என்றல் முதல் ஆளாக நிற்பது நமது கட்டுமரம் கருணாநிதிதான். மற்றவர்களெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.


sankaranarayanan
ஜூலை 10, 2025 12:17

வாய்யா வா அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசியல் தம்பியே வா உனக்கும் நோபல் பரிசு வாசனை தொடங்கிவிட்டதா என்னடா ஆளையே காணோமோ என்று இருந்தோம் அமெரிக்க சென்று டிரம்பை தரிசித்து இருவருமே ஒன்றாக சேர்ந்து நோபல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாமே எதற்கு உந்துகள் இருவர்க்கும் அந்த நோபல் பரிசு என்று உனக்கும் தெரியாது அந்த டிரம்புக்கும் தெரியாது சூன்யம்தான்


Naga Subramanian
ஜூலை 10, 2025 12:06

டிரம்ப் வரிசையில் கெஜ்ரி. அதேபோல, எந்தவொரு ஊழலும் இல்லாமல், எப்பொழுதும் தமிழகத்தை அமைதியாக வைத்திருந்து, நல்லாட்சியை நல்கிடும் நமது தமிழகத்து அப்பாவையும் இந்த வரிசையில் சேர்த்து மகிழலாமே.


Anand
ஜூலை 10, 2025 11:32

ஏன் இன்னும் வெளியே விட்டு வைத்து இருக்கிறார்கள் ?


S.V.Srinivasan
ஜூலை 10, 2025 11:05

டிரம்ப் அண்ணனுக்கு போட்டியா வந்துட்டாருய்யா.


Mecca Shivan
ஜூலை 10, 2025 10:23

இப்படித்தான் ஒரு பித்தன் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படவேண்டும் என்று பிதற்றுகிறான்


SVR
ஜூலை 10, 2025 10:06

ஆஹா ஆஹா என்னே ஒரு ஆசை. ரமோன் மாக்சேசே விருது வாங்கினால் நோபெல் விருது கிடைத்துவிடுமா? என்னே ஒரு நப்பாசை. விட்டால் மத்திய கிழக்கு ஆசியாவில் தான் தான் போரை நிறுத்தினேன் என்று கூறி விருது கமிட்டிக்கு கடுதாசி எழுதுவார் போலிருக்கிறது. பஞ்சாபில் ஒரு கோமாளி ஆட்சி செய்கிறது. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்வோம்.


Sampath
ஜூலை 10, 2025 09:25

இந்த பெருச்சாலி இன்னும் சுத்திகிட்டு இருக்க ? இன்னிக்கு பொறி வைக்கநும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை