உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாமில் நிறைவேறியது பொது சிவில் சட்டம்; முக்கிய அம்சங்கள் என்னென்ன? வாழ்த்து சொன்ன அமித்ஷா!

அசாமில் நிறைவேறியது பொது சிவில் சட்டம்; முக்கிய அம்சங்கள் என்னென்ன? வாழ்த்து சொன்ன அமித்ஷா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: அசாம் சட்டசபையில் இன்று (மே 27) பொது சிவில் சட்டம் நிறைவேறியது. உத்தராகண்ட், குஜராத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் இனி பொது சிவில் சட்டம் அமலில் இருக்கும்.

முக்கிய அம்சங்கள்

* அசாமில் இனி திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து தொடர்பான விஷயங்களில், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விதிகளே அமலில் இருக்கும். * ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை யாரும் திருமணம் செய்ய முடியாதபடி கடும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. * மனைவிக்கு வியாதி ஏற்பட்டுவிட்டது, அவரால் குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை என்பதற்காக மறுமணம் செய்ய முடியாது. * மனைவி உயிருடன் இருந்தால் ஓர் ஆண் வேறு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. * லின் இன் உறவு முறையில் வசிப்பவர்களும் அதனை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.* திருமணம் நடந்த 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்; 60 நாள் காலத்திற்குள் திருமணம் அல்லது விவாகரத்தை பதிவு செய்ய தவறினால் ரூ.10,000 அபராதத்தை செலுத்த நேரிடும்.* லிவ்-இன் உறவில் இருக்க இருவருமே 21 வயது அல்லது அதற்கும் மேல் கொண்டவராக இருக்க வேண்டும். இதில் மதம் பிரச்னை கிடையாது.சடட்சபையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியதாவது: பொது சிவில் சட்டமானது சீர்த்திருத்தத்துக்கானது. பெண்கள் நலன் சார்ந்தது. இதுவரை ஓர் ஆண் இறந்தால் மனைவிக்குதான் அவரது சொத்துகள் சென்று சேரும். பொது சிவில் சட்டத்தின்படி, மனைவி மட்டுமல்லாது அவரது பிள்ளைகள், பெற்றோரும் சொத்தில் சம உரிமை உண்டு.பழங்குடிகள் மத்தியில் லிவ்-இன் உறவுப் பழக்கம் இல்லை. அவர்கள் ஏற்கனவே காலங்காலமாகவே பொது சிவில் சட்டத்தை பின்பற்றி வருகிறார்கள் போல, அவர்களுக்கு இச்சட்டம் தேவையில்லை. லிவ்-இன் உறவில் இருப்போர் அதை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ஒரு நபர் ஒரு நேரத்தில் ஒருவருடன் தான் லிவ்-இன் உறவில் இருக்க முடியும். ஒருவரே அசாமில் ஒருவருடன், மும்பையில் இன்னொருவருடனும் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

அமித்ஷா வாழ்த்து

இது குறித்து சமூக வலைதளத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:அசாம் மக்களுக்கு வாழ்த்துகள்.பொது சிவில் சட்டம் என்பது பாஜ துவங்கப்பட்டதில் இருந்தே அதன் ஒரு தீர்மானமாக இருந்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில், பாஜ ஆளும் மாநில அரசுகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான சட்டங்களை இயற்றியுள்ளன. உத்தராகண்ட் மற்றும் குஜராத்திற்குப் பிறகு, அசாம் இன்று பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தருணத்தில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கும், இந்த மசோதாவை ஆதரித்த அனைத்து எம்எல்ஏக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சட்டதை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Manicklal Chakraborty
மே 30, 2026 14:10

நன்றி


Manicklal Chakraborty
மே 30, 2026 14:10

மக்கள் எங்கு இருக்கிறார் அங்கே பொதுவான சிவில் சட்டம் இருக்கும்.


பேசும் தமிழன்
மே 28, 2026 07:41

இங்கே தமிழ் நாட்டிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.... ஆனால் திருட்டு திராவிட மாடல் ஆட்கள் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.... அவர்களின் B டீம்.... இப்போது ஆட்சி செய்பவர்களும் எதிர்ப்பு தான் தெரிவிப்பார்கள்.... சனாதனம் பற்றி எதிர்கட்சி தலைவர் சட்டசபையில் தவறாக பேசிய போதே... அதற்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.... இந்த அரசு அனைத்து மதத்தினருக்கும் பொதுவான அரசு என்று நிரூபித்து இருக்க வேண்டும்.... ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.


Sundar R
மே 28, 2026 02:01

Kamarajar evinced what the clean governance is. MGR showed how to command respect to the office of the CM. Jayalalithaa displayed how the Military will run the Government of Tamil Nadu. Tamil Nadu people are very unfortunate because for a long time, they are yet to get a new folk to occupy the seat of power and authority to rule our Tamil Nadu as Chief Minister. If Uniform Civil Code is implemented in Tamil Nadu, Joseph Vijay will acclaim respect from the people. Otherwise, 8 crores of Tamil Nadu people should get amalgamated and insist Joseph Vijay to implement the Uniform Civil Code. Tamil Nadu will be the first South Indian state to implement the Uniform Civil Code. On several occasions, the judges of the SC have given direction to our Central Government to implement the Uniform Civil Code at once. BY CONSIDERING NATIONAL INTEREST ON TOP OF EVERYTHING, THE OPPOSITION AND THE SUPPORTERS OF OPPOSITION WILL COME FORWARD TO IMPLEMENT UNIFORM CIVIL CODE IN TAMIL NADU. PERSONS WHO ARE OPPOSING THE UNIFORM CIVIL CODE, IS NOT GOING TO GET ANY POLITICAL OR MATERIAL BENEFIT. IF GOD DECIDES, ALL OPPOSITION LEADERS WILL ACCEPT TO IMPLEMENT UNIFORM CIVIL CODE.


c.mohanraj raj
மே 28, 2026 01:04

நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய சட்டம்


ravindran
மே 27, 2026 22:21

ஒவ்வொரு இந்தியனும் மனதார வரவேற்கும் சட்டம். வாழ்த்துக்கள் பாஜக அரசு. பாஜகவால் மட்டுமே இந்த மாதிரி நல்ல சட்டங்களை அமல்படுத்த முடியும்


Rajamani K
மே 27, 2026 22:10

What question you ask?How cowards can be courageous?


sdmsasen Samy
மே 27, 2026 20:32

Does Mr. Vijay do the same in Tamil Nadu as well? The political class in Tamil Nadu keep doing thearics as if Tamil Nadu is well progressed state ahead of USA. Why not they implement this simple Common Civil Procedure code in Tamil Nadu ? Do they have courage ? Or they are cowards ?


தமிழ்வேள்
மே 27, 2026 20:28

இந்த பொது சிவில் சட்டம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றால், அவர்கள் விரும்பும் நாட்டுக்கு போய் விடலாம்.. ஆனால் பாரதம் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு மத சுதந்திரம் அல்லது நாலு நிக்கா எட்டு நிக்கா ஹலாலா என்று கூத்தடிக்க இயலாது..ஆப்படித்து விடுவார்கள்....


பேசும் தமிழன்
மே 28, 2026 07:44

இதெல்லாம் அந்த பாழாய் போன கான் கிராஸ் கட்சி செய்து வைத்த அநியாயங்கள்.... நாட்டை கெடுத்து கூட்டி சுவராக்கி வைத்து இருக்கிறார்கள்.... இன்னும் கொஞ்ச நாட்கள் கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்து இருந்தால்.... இந்தியாவில் இந்துக்கள் வாழத் தகுதி இல்லை என்று கூறி இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை