அடல் கேன்டீன் குழு நியமனம்
புதுடில்லி:நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய தலைநகர் பிராந்தியத்தில், ஏழைகள் மற்றும் குடிசைவாசிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்க, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில், 100 இடங்களில் அடல் கேன்டீன் துவக்க, முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்த பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.அடல் கேன்டீன் திட்டத்தை செயல்படுத்த விரிவான ஆய்வு செய்து இடங்களை தேர்வு செய்தல், நடைமுறைகளை பரிந்துரை செய்ய, ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.தலைவர், ஒரு முதன்மை இயக்குனர், ஒரு தலைமைப் பொறியாளர், ஒரு மேற்பார்வைப் பொறியாளர், ஒரு துணை இயக்குனர், ஒரு உதவிப் பொறியாளர், இரண்டு இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.