உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் முதல்வர் அதிஷி: டில்லி கவர்னர் புகழாரம்

கெஜ்ரிவாலை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் முதல்வர் அதிஷி: டில்லி கவர்னர் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கெஜ்ரிவாலை விட டில்லி முதல்வர் அதிஷி ஆயிரம் மடங்கு சிறந்தவர் என டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா கூறியுள்ளார்.டில்லி முதல்வராக கெஜ்ரிவால் இருந்த போது, அவருக்கும் துணைநிலை கவர்னருக்கும் மோதல் நீடித்து வந்தது. பல விவகாரங்களில் இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறை சென்றதால் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அமைச்சராக இருந்த அதிஷி முதல்வராக பதவியேற்றார்.இந்நிலையில் இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலை.யில் நடந்த விழாவில் முதல்வர் அதிஷியுடன் இணைந்து துணைநிலை கவர்னர் சக்சேனா பங்கேற்றார்.அப்போது சக்சேனா பேசும்போது, '' அதிஷி, அவருக்கு முன்பு முதல்வராக இருந்தவரை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்பதை உறுதியுடன் சொல்வேன்'', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ponssasi
நவ 23, 2024 11:00

குளத்துல முதல் கல்லை தூக்கி போட்டாச்சு.


அப்பாவி
நவ 23, 2024 03:43

மகாபாரத சகுனி, தி.மோகனாம்பாள் வைத்து யெல்லாம் ஏன் ஞாபகத்துக்கு வர்ராங்க கோவாலு?


Ramesh Sargam
நவ 22, 2024 22:37

ஏதோ வச்சி செய்கிறார் டில்லி கவர்னர்.


RAMAKRISHNAN NATESAN
நவ 23, 2024 09:31

Not possible. She cannot bear the pain, as she might probably have crossed the climacteric.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை