உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.டி.எம்., கட்டண உயர்வு இன்று முதல் அமல்; பரிவர்த்தனைகளை நோட் பண்ணுங்க!

ஏ.டி.எம்., கட்டண உயர்வு இன்று முதல் அமல்; பரிவர்த்தனைகளை நோட் பண்ணுங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதற்கான புதிய விதிகள் இன்று (மே 1) முதல் அமலுக்கு வந்தன. பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரி செலுத்த வேண்டும்.ஏ.டி.எம்.,களில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை, அதிகரித்துக் கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதன்படி, ஒரு வங்கியின் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.,மில், பணம் எடுப்பதற்கான கட்டணம் வசூல் இன்று முதல் அமலுக்கு வந்தது.கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்., சேவைக்கும், மற்ற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்துவதில் மெட்ரோ நகரங்களில் ஐந்து முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் மூன்று முறையும் கட்டணம் வசூலிக்கப்படாது. அதேநேரத்தில் பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரி செலுத்த வேண்டும். ரொக்கம் அல்லாத ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளான பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு, 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 6 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த புதிய நடைமுறை இன்று (மே 1) முதல் அமலுக்கு வந்தது. இலவச வரம்பைத் தாண்டி ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, தேவையற்ற பணம் எடுப்பதைக் கட்டுப்படுத்துவது நல்லது. டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

vadivelu
மே 01, 2025 21:42

இனி ATM போகாதீர்கள், வேலை எதுவும் இல்லை என்றால் வங்கிக்கே செல்லுங்கள். ATM தேவை புரியும்.


தத்வமசி
மே 01, 2025 20:58

இந்த கட்டுப்பாடு இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறதா ? இல்லை பொருளாதார பலவீனத்தை வெளிப்படுத்துகிறதா ? வங்கிகளில் பணத்தை மக்கள் இட்டு வைப்பதை வைத்து வங்கிகள் வியாபாரம் செய்கின்றன. ஆனால் கட்டுப்பாடு மக்களுக்கு. மேலை நாடுகளில் மக்களைப் பிழிந்து இது போல வரி வசூல் நடக்கிறது. அதற்கு அவர்களுக்கு தரமான சாலை, கல்வி, மின்சாரம், லஞ்சம் இல்லாத அலுவலகங்கள் என்று முறையாக மக்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். அதே சமயம் வளைகுடா நாடுகளில் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை. அங்கு வருமான வரி கிடையாது. வாட் வரியை இப்போது தான் அமல் செய்துள்ளனர். அங்கும் மக்களுக்கு தரமான சாலை, கல்வி, மின்சாரம், லஞ்சம் இல்லாத அலுவலகங்கள் என்று முறையாக மக்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். ஆனால் இந்தியாவில் ?


கனோஜ் ஆங்ரே
மே 01, 2025 11:58

ஒருத்தன மோசடி பண்ணி ஏமாத்துனாம்னா... அவன் ஆசைய தூண்டனும், அப்படி தூண்டுனா, அவன் பேராசையின் காரணமாக... நிறைய தப்பு பண்ணுவான்...? அந்த தப்ப சரி செய்யுற மாதிரி நடிச்சு... அவன மோசடி செஞ்சு ஏமாத்தனும். இது நேர்மையா மோசடி செஞ்சு ஏமாத்துற வழி... இதுல சிக்க முடியாது, குற்றத்தை நிரூபிக்கவும் முடியாது...


Subramanian
மே 01, 2025 10:51

நாம பணம் இனிமேல் சம்பாதிக்க வேண்டாம் என்ற எண்ணத்தை உருவாக்கவும். அதன் பின் குறிப்பிட்ட குலத்தாருக்கு சொத்து என்பதை உருவாக்கவும் ஆன வழி.


Gokul Krishnan
மே 01, 2025 10:50

சரி முதன் முறை பணம் எடுக்கும் போதே அடம் இல் பணம் இல்லை என்றால் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு அபராதம் விதிக்கப்படுமா ஏன் என்றால் இந்த புதிய விதி படி வாடிக்கையாளர் பணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்யும் போது அது முதல் பரிவர்த்தனை ஆக கணக்கில் கொள்ளப்படும்


J.Isaac
மே 01, 2025 09:39

பணம் போட்டோ வரி, எடுத்தா வரி, சம்பாத்தியம் பண்ணினா வரி, செலவழித்தா வரி, பிச்சைக்காரன் சாப்பிடுகிற சாப்பாட்டிற்கும் வரி.


sridhar
மே 01, 2025 13:29

வசதியா வாழனும், அரசுக்கு வரி கட்டக்கூடாது. நல்லா இருக்கு உன் நியாயம் .


தமிழ்வேள்
மே 01, 2025 09:38

ஏடிஎம் ல் ஒருமுறை ரொக்கம் எடுக்க வரம்பு ரூ.20000 கிராஸ் பேங்க் ஏடிஎம் ல் 10000 ஆக செட் செய்யப்பட்டுள்ளது இதனால் தேவையின்றி இருமுறை அல்லது மும்முறை எடுக்க வேண்டியுள்ளது..மேலும் விடுமுறை நாட்களில் கரன்ட் அக்கவுண்ட் ஆசாமிகள் ஏடிஎம் ல் லட்சக்கணக்கில் ரொக்கம் எடுக்க கட்டுப்பாடு தேவை..விடுமுறை நாட்களில் மட்டும் 10000 கட்டுப்பாடு வைக்கலாம்


குமரி குருவி
மே 01, 2025 09:35

விஞ்ஞான வளர்ச்சி சந்தோஷம் கட்டணம் என கடுப்படிப்பது சங்கடம்


ஆரூர் ரங்
மே 01, 2025 09:27

எங்களுக்கு எல்லாமே ஓஷில வாங்கித்தான் பழக்கம். இந்த மாதிரி கட்டணங்கள் கசக்கின்றன.


J.Isaac
மே 01, 2025 10:25

எங்களுக்கு அரசுக்கு சிங்கி அடிச்சே பழக்கம்


அப்பாவி
மே 01, 2025 09:18

ஒரு புது டெக்னாலஜி வந்தா அது உற்பத்தி செலவையும், சர்வீஸ் செலவையும்.க்ய்றைக்கும். இங்கே என்னடான்னா கார்ப்பரேட்கள் அரசைக் கையில் போட்டுக்கொண்டு, கட்டணங்களை அதிகமாக்கி மக்களிடமிருந்து உருவறாங்கோ.


ஆரூர் ரங்
மே 01, 2025 10:34

ஆன்லைன் தில்லுமுல்லு அதிகரித்து வருகிறது. அதனால் கணினி சர்வர் பாதுகாப்பு அம்சங்களுக்கும், கரன்ஸி பாதுகாப்பான போக்குவரத்து, இன்ஷூரன்ஸ் செலவுகளும் விண்ணை முட்டுகின்றன. ஊழியர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள். ஒரே வழி. பல பரிவர்த்தனைகளுக்கு மின்னணு முறையை முழுமையாக கட்டாயப்படுத்துவதுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை