உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரெடிட் கார்டு, பான்-ஆதார் இணைப்பு; இன்று முதல் அமலான புதிய மாற்றங்கள்

கிரெடிட் கார்டு, பான்-ஆதார் இணைப்பு; இன்று முதல் அமலான புதிய மாற்றங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கி கிரெடிட் கார்டு, ஆதார் பான் இணைப்பு, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இன்று முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் பல அன்றாட சேவைகளில் இன்று(ஜூலை 1) முதல் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனிமேல் ஆதார் விவரங்கள் கட்டாயம் சரிபார்க்கப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.தற்போது பான் கார்டு உபயோகிப்பவர்கள் டிச.31க்குள் அவற்றை தங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தி இருந்தது. ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு இன்று முதல் ஆதார் அட்டை சரிபார்ப்பு என்பது கட்டாயமாகிறது.வருமான வரி விவரங்களை தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜூலை 31ம் தேதி என்பது மாற்றப்பட்டு செப்டம்பர் 15ம் தேதி வரை என்பதும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இது பயனாளிகளுக்கு கூடுதலாக 46 நாட்கள் அவகாசத்தை தருகிறது.எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி வங்கிகள் தங்களின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த விமான விபத்து காப்பீட்டு வசதி நிறுத்தப்படுகிறது. மாத பில்களில் செலுத்தப்படும் குறைந்தபட்ச தொகையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மற்றொரு முன்னணி வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வங்கியும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.ஐசிஐசிஐ வங்கியானது, ஏடிஎம் பணவரித்தனைகளில் சேவை கட்டண முறைகளில் திருத்தங்களை இன்று முதல் அமல்படுத்தி உள்ளது. மாதம்தோறும் முதல் 5 பண பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் இல்லை. அதன் பின்னர் மேற்காள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.23 கட்டணம் வசூல் என்பது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தினால் மெட்ரோ நகரங்களில் 3 இலவச பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம். சிறிய நகரங்களில் 5 முறை பரிவர்த்தனைகள் செய்யலாம். இதற்கு மேல் என்றால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 செலுத்த வேண்டும். இந்த அனைத்து புதிய நடைமுறைகளும் ஏற்கனவே அறிவித்தபடி இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜூலை 01, 2025 10:00

உடாதீங்க. கிரெடிட் கார்டு, பான், ஆதார், பொறந்த சர்டிபிகேட், பள்ளிக்கூட சர்டிபிகேட், பஸ் டிக்கெட், ப்ளேன் டிக்கெட், ரயில் டிக்கெட், சினிமா டிக்கெட், ஓட்டல் பில், கரண்ட் பில், வாட்டர் பில், வீட்டுவரி பில், மளிகை பில், சலூன் பில் இத்யாதி எல்லாத்தையும் ஒண்ணா இணைக்கணும். இல்லேன்னா ஒவ்வொரு பில்லுக்கும் 1000 ரூவா அபராதம்னு போடுங்க. வெளையாடுறாங்களா?


Pradeesh Senthamarai
ஜூலை 01, 2025 09:02

எல்லாமே ஓசிக்கு அலையும் ஜென்மங்கள்


Kalyanaraman
ஜூலை 01, 2025 09:01

எல்லையோர மாநிலங்களில் ஆதார் கார்டு என்பது நகைப்புக்குறியதாகிறது. வெளிநாட்டினரும் ஆதார் கார்டு பான் கார்டு ரேஷன் கார்டு பாஸ்போர்ட் எல்லாம் வைத்துள்ளார்கள். இதை கொடுத்தவர்களுக்கு கடும் தண்டனை அளிக்காமல் வேடிக்கை பார்க்கும் நமது முதுகெலும்பற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் மிகவும் கண்டனத்துக்குரியவை.


Priyan Vadanad
ஜூலை 01, 2025 08:05

சேவை கட்டணம் என்று சொல்லவேண்டாம். பிடுங்கல் கட்டணம் என்று எழுதுங்கள்.


visu
ஜூலை 01, 2025 09:22

5 முறை இலவசம் அடேர்க்கு மேல எவன் பணம் எடுக்குறேன் தெரியல இதெற்கு முன் வங்கியில் வரிசையில் நின்று பணம் எடுத்த பொது அவனவன் மாதம் 2 முறைகூட போக மாட்டான் இன்னிக்கு ATM வந்ததும் அதை நாசம் செய்ய 5 முறைக்கு மேல எடுப்பானுங்க


RAVINDRAN.G
ஜூலை 01, 2025 10:07

அதுதான் Gpay phonepe வந்துச்சுல்ல இன்னும் கோமாலயே இருக்கீங்களா ?


முக்கிய வீடியோ