உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவாய் மீதான தாக்குதல் இந்தியரை கோபப்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி

கவாய் மீதான தாக்குதல் இந்தியரை கோபப்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைமை நீதிபதி கவாயிடம் பேசினேன். சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடமில்லை. இது முற்றிலும் கண்டனத்திற்குரியது.இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்ட போது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். இது நீதியின் மாண்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ravi
அக் 07, 2025 15:13

அதே போல் கவாயின் இந்து மதக் கடவுள்கள் நம்பிக்கையின் மீதான தேவையற்ற தாக்குதல்களும் இந்தியர்களை கோபப்படுத்தி உள்ளது.


SVR
அக் 07, 2025 12:06

இந்த ஆள் புத்த மதத்தை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. அப்புறம் எப்படி இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்று சொல்ல முடியும்? இந்த ஆளுக்கு ஹிந்து கடவுள்கள் பற்றி எதற்கு விமர்சனம் செய்ய வேண்டும்? தேவையே இல்லை. பெட்டிஷனை டிஸ்மிஸ் செய்யணும் என்றால் பேசாமல் செய்ய வேண்டியது தானே? அதிக பிரசங்கம் செய்திருக்கிறார். இந்த வக்கீல் செய்தது சரிதான். தான் செய்தது தவறு என்று தெரிந்து இந்த பௌத்தன் வக்கீல் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஹிந்துகளின் துரதிருஷ்டம் இந்த ஆளை 23-11-2025 வரை சகித்துக்கொள்ள வேண்டும்.


அப்பாவி
அக் 07, 2025 08:57

லட்சக்கணக்கில் தேக்கி வெச்சிருக்குற வழக்குகளால் மக்களுக்கு கோவமே வரலை


D Natarajan
அக் 07, 2025 08:46

அந்த வக்கீல் செய்தது சரிதான். தப்பே இல்லை. இந்த நீதிபதி மட்டும் ஹிந்து கடவுளை இழிவு படுத்தலாமா


KOVAIKARAN
அக் 07, 2025 07:45

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள், எந்த வழக்கிலும் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்ததேயில்லை, அவைகள் இந்து மதத்திற்கு எதிரானது என்று அறிந்தும்கூட. இந்த தலைமை நீதிபதி தான், உங்கள் ஸ்ரீ விஷ்ணு அதையெல்லாம் பார்த்துக்கொள்ள மாட்டாரா என்று ஒரு வழக்கில் கூறியவர். அதற்காக அவர்மீது செருப்பு வீசியதை நாம் நியாயப்படுத்தக்கூடாது. குறைந்தபட்சம், அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு மரியாதை கொடுத்திருக்கவேண்டும்.


N.Purushothaman
அக் 07, 2025 06:56

நீதிபாதிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். மற்ற மதத்தை காயப்படுத்தி இருந்தால் இந்நேரம் இவரின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லி தெரியத்தேவையில்லை ...


Appan
அக் 07, 2025 05:47

உச்ச நீதி மன்றத்தில் செருப்பு வீசியது ,இதுவரை சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒன்று. நேற்று ஒடிசா cuttak நகரிலும் பெரும் வன்முறை போராட்டம். ஒடிசா இது நாள் வரை அமைதியானான் மாநிலம். ஆனால் இப்போ வன்முறை . . நாடு எங்கெ போய் கொண்டு இருக்கிறது ...?


Kasimani Baskaran
அக் 07, 2025 04:17

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியம்தான். மத வெறுப்பு உச்சப்பஞ்சாயத்தாருக்கு அழகல்ல.


Ramesh Sargam
அக் 07, 2025 01:02

ஒரு நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே தாக்கப்படுவது மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம். தாக்கியவன் தாக்கியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்காமல் நீதிபதி பொறுப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.


Priyan Vadanad
அக் 06, 2025 23:52

நமது பிரதமர் மதிப்புக்குரியவர், மற்றவரை மதிப்பவர். ஆகவேதான் கண்டிக்கிறார். ஆனால் அவர் பெயரை சொல்லிகொண்டு எப்படியெல்லாமோ மதசகிப்பில்லாமல் கருத்து பதிவிடுகிறார்கள். என் இனிய கருத்து பதிவிடுநண்பர்கள் விவேக்கமான கருத்துக்களை நமது பிரதமரை முன்னோடியாக கொண்டு பதிவிடுங்கள்.


V Venkatachalam
அக் 07, 2025 14:44

வாசகர்களுக்கு எந்த அறிவுரையும் தேவையில்லை. அவர்கள் தன்னிலை அறிந்தவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை