உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரசேவகர்கள் மீது தாக்குதல்: நியாயப்படுத்திய சமாஜ்வாதி எம்.பி.,

கரசேவகர்கள் மீது தாக்குதல்: நியாயப்படுத்திய சமாஜ்வாதி எம்.பி.,

லக்னோ: 'கடந்த 1990ல் உத்தர பிரதேசத்தில் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது அரசியலமைப்பை பாதுகாக்கவே' என, சமாஜ்வாதி கட்சி லோக்சபா எம்.பி., சனாதன் பாண்டே தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், 1990ல் ராமஜென்மபூமி போராட்டத்தின் போது, பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தை நோக்கி முன்னேற முயன்ற கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது, முதல்வராக இருந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில், 28 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், முலாயம் சிங்கின் மகனும், சமாஜ்வாதி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவ், அடுத்த மாதம் அயோத்தியில் உள்ள ராமர் மற்றும் ஹனுமன் கோவில்களுக்கு சென்று வழிபட திட்டமிட்டுள்ளார். இது குறித்து சமீபத்தில் விமர்சித்த பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், 'துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட கரசேவகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடம் அகிலேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி., சனாதன் பாண்டே, 'துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், கடந்த 35 ஆண்டுகளாக முலாயம் சிங்கை பா.ஜ., விமர்சித்து வருகிறது. 'அப்போதைய சூழலில், நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும், அரசியல் அமைப்பை பாதுகாக்கவுமே துப்பாக்கிச் சூடு நடத்த அவர் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் பொதுமக்களை பா.ஜ., தவறாக வழி நடத்துகிறது' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 10, 2026 08:32

துப்பாக்கிச்சூடு நடந்த பிறகும் அதை நடத்திக்காட்டிய சமாஜ்வாதி கட்சியை ஆட்சியில் ஹிந்துக்கள் ஏன் அமர வைத்தனர் >>


sankar
நவ 10, 2026 09:54

வாக்குகள் அன்றைய தினம் வாக்குசீட்டு முறையில் - குண்டாராஜ் வாக்குகளை, வாக்குப்பெட்டிகலாய் அபகரித்து ஆட்சி செய்தது


பேசும் தமிழன்
நவ 10, 2026 08:23

கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலுக்கு.... கோவில் உள்ளே நுழைய கூட தகுதி இல்லை.... உங்களை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.....துப்பாக்கி சூடு நடத்தி விட்டு... அதை நியாயப்படுத்தி அறிக்கை விடுகிறார்கள் இந்த இண்டி கூட்டணி ஆட்கள்.


N.Purushothaman
நவ 10, 2026 07:43

முலாயம் சிங்குக்கும் வாளுக்கு பயந்து மதம் மாறினவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கும் என நினைத்தால் அது தவறு ....


குல்லா யாதவ், சம்பல்
நவ 10, 2026 07:35

இவனை ஓடவிட்டு சுட்டு கொள்ளலாம். இன throki


Kasimani Baskaran
நவ 10, 2026 07:18

காட்டுமிராண்டி...


ramani
நவ 10, 2026 06:57

சமஜ்வாடி எம்பியின் பதவியை பறிக்க வேண்டும்


ராஜா
நவ 10, 2026 01:15

அந்த கோவிலை மீட்டு தர வக்கில்லை. சேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவானாம்.


புதிய வீடியோ