உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரலாற்றை அழிக்க முயற்சி: தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு

வரலாற்றை அழிக்க முயற்சி: தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு

புதுடில்லி: '' ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வரலாற்றை அழிக்க முயற்சி செய்கிறது,'' என டில்லியில் தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் யு.ஜி.சி., வரைவு விதிகளை திருத்தம் செய்ய தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது., யு.ஜி.சி., விதிகளை திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தி.மு.க., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எம்.பி., கனிமொழி உள்ளிட்ட தி.மு.க., எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதேபோல, காங்., வி.சி.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றனர். அப்போது, , பல்கலைக்கழக மானிய குழு வரைவு விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yy7xjcxa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வரலாற்றை மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருகிறது என நான் கூறிவருகிறேன். அதற்கு துவக்கப்புள்ளி இதுதான். தங்களின் ஒரே வரலாறு ஒரே பாரம்பரியம் ஒரே மொழி என்ற ஒரே கொள்கையை கொள்கையை அமல்படுத்த விரும்புவதால் தான் அரசியல்சாசனம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தங்களது கல்வி முறையை கொண்டு வருவதற்கான மற்றுமொரு முயற்சியே இது. இது போன்று பல போராட்டங்கள் நடத்த வேண்டும். ஏனென்றால், அந்த அமைப்பால் நமது அரசியலமைப்பு, மாநிலங்கள் கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்றை மாற்ற முடியாது என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொள்ள மத்திய அரசு விரும்புகிறது. தொழிலதிபர்களின் சேவகர்களாக அரசியல்வாதிகள் இருக்க விரும்புகின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க முடியாது. இக்கொள்கைக்கு எதிராகவும்,பா.ஜ.,விற்கு எதிராகவும் இருக்கிறேன். இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Yaro Oruvan
பிப் 10, 2025 12:06

ராகுல்ஜி தங்கள் பேச்சால் டெல்லி அக்கலை கவர்ந்துவிட்டீர்கள். ஒரே ஒரு கொஸ்டின்: சைபர்ல சைபர் ஆனா மீதி எத்தினி.. மூணு முறை ஆட்சி செஞ்ச டெல்லில தங்கள் பேச்சு திறமையால் இப்போ தொடர்ந்து மூணு முறை 0 அதாவது சைபர் / ஜீரோ / பூஜ்யம்


Rajasekar Jayaraman
பிப் 07, 2025 10:56

கொள்ளையர்கள் திருட்டு வரலாறு எங்களுக்கு வேண்டாம் பொறம்போக்கே.


பேசும் தமிழன்
பிப் 06, 2025 19:49

இந்தியாவின் உண்மையான வரலாற்றை அழித்து..... ஏதோ காந்தி மற்றும் நேரு மட்டுமெ நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் என்பது போல் போலியாக வரலாற்றை தவறாக எழுதி வைத்து இருக்கிறீர்கள்.... உங்கள் முந்தைய கான் கிராஸ் ஆட்சியில்..... நாட்டை கொள்ளை அடிக்க வந்த ஆட்களை பற்றி பக்கம் பக்கமாக எழுதி வைத்து விட்டு.... அவர்களை தீரத்துடன் எதிர்த்து போர் செய்த அரசர்களை பற்றி எதுவும் இல்லை..... ஏதோ மராட்டியர்கள் விழித்து கொண்டு விட்டதால்.... சத்ரபதி சிவாஜி மகராஜ் பற்றி செய்திகள் இன்றும் நம்மால் படிக்க முடிகிறது.


பாலா
பிப் 06, 2025 19:36

தமிழர்களைத் திரவிடியன்கள் என்று மற்றும் தெலுங்கன்களுக்கு இவர் என்ன சொல்லுவார்?


ஆரூர் ரங்
பிப் 06, 2025 19:03

யுனெஸ்கோ சாக்ரடீஸ் விருது கூட வரலாறு தான்.ஆனா இப்போ அதை சொன்னா சிரிக்கிறார்கள்.


V.Mohan
பிப் 06, 2025 19:02

வரலாற்றை அழிக்க முயற்சி..... அல்ல அல்ல ...வரலாற்றை மாற்றி எழுதிய காங்கிரஸ் கட்சியே கேவலர்கள். இந்தியாவையும் இந்திய மக்களையும் கொன்று குவித்த , மதமாற்றிய, நாட்டை கொள்ளை அடித்த வந்தேறிகளை கதாநாயகர்களாக உயர்த்தி அவர்களது சமாதிகளை நாட்டின் உயர்ந்த சரித்திர சின்னங்களாக நம் நாட்டு மக்களை மூளை சலவை செய்துள்ள கும்பல்தான் இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. பாஜக வரலாற்றை மாற்ற முயற்சிப்பதாக இந்த பொய்யர்கள் பேசுகின்றனர். அதுவும் படிப்பை பாதியில் நிறுத்திய பாதகர் பிதற்றுகிறார்.


Anand
பிப் 06, 2025 18:20

முதலில் இவர் இந்தியனா, இந்திய குடிமகனா? என பொதுவெளியில் அறிவியுங்கள், அப்படி இல்லை ஏதோ தில்லுமுல்லு நடக்கிறது என தெரிந்தால் உடனடியாக இவரை இந்நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்....


Yaro Oruvan
பிப் 06, 2025 17:55

கொசுத்தொல்ல தாங்க முடியல.. பப்பு ப்ளீஸ் விட்ருங்க.. போயி வேற ஏதாவது பொழப்ப பாருங்க.. ஒளரலாம் அதுக்குன்னு இப்டியா ஏக்கர் கணக்கா


Narasimhan
பிப் 06, 2025 17:40

இவனால் தான் பாஜக வளர்கிறது என்று இத்தாலிய அடிமைகளுக்கு தெரியப்படுத்தவும். டெல்லியில் மக்கள் செருப்பால் அடித்து துரத்தப்போகின்றனர். இப்போதும் திருந்தவில்லையென்றால் காங்கிரசுக்கு வெகு விரைவில் மூடுவிழாதான்


வாய்மையே வெல்லும்
பிப் 06, 2025 17:15

மொள்ளமாரி முடிச்சவுக்கி கேப்மாரி .. இந்தவார்த்தைகளுக்கு அர்த்தம் வேண்டுமானால் பொய்யுருட்டு பேச்சு இத்யாதி முட்டு குடுக்கும் ட்ரைவிஷா கழகங்களுடன் சங்கமியுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை