உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறை கையகப்படுத்திய விடுதியை சொந்தமாக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்

அமலாக்கத்துறை கையகப்படுத்திய விடுதியை சொந்தமாக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்

மூணார்:கேரளா மூணாறு அருகே அமலாக்கத்துறை கையகப்படுத்திய தங்கும் விடுதியை பங்குதாரர்கள் சொந்தமாக்குவதற்கு நடந்த நடவடிக்கைகளை இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி தடுத்து நிறுத்தினார்.கேரளா எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுபுழாவைச் சேர்ந்தவர் அஷ்ரப். இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில துணைத்தலைவர் பொறுப்பு வகித்தார். பல்வேறு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் உள்ளார்.இவர் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தபோது கறுப்பு பணம் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.அந்த பணத்தைக் கொண்டு மூணாறு அருகே விரிபாறை பகுதியில் அஷ்ரப் தங்கும் விடுதி கட்டியது தெரியவந்தது. அதனால் கறுப்பு பணம் தடுப்பு சட்டத்தில் தங்கும் விடுதி, 6.759 ஏக்கர் நிலம் ஆகியவற்றை 2023 ஆகஸ்ட்டில் அமலாக்கத்துறையினர் கையகப்படுத்தினர்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்து அது செயல்படவும், மூன்று பங்குதாரர்களின் பெயருக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் நடந்து வந்தன.அதற்கு ஊராட்சி, வருவாய் துறைகளைச் சேர்ந்த சில அதிகாரிகள் உதவியதாக தெரியவந்தது. அந்த நடவடிக்கைகளை கலெக்டர் விக்னேஸ்வரி தடுத்து நிறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ