உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்க..: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்க..: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய கல்விக் கொள்கை பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினார்.மத்திய அரசின் 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தில் தமிழகம் இன்னும் இணையவில்லை. இதனால் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கல்வி உட்கட்டமைப்புகளுக்காக வழங்கப்படும் நிதி இன்னும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிஎம் ஸ்ரீ திட்டமானது மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையையை போன்றுள்ளது. மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த கோருகிறது என்றும், அதனால் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.மாநில கல்வித்துறைக்கு மத்திய அரசு, உரிய நிதி வழங்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வளைதள பக்கத்தில் கண்டன பதிவை குறிப்பிட்டுள்ளார். அதில், ''தேசிய கல்விக் கொள்கைக்கு தலைவணங்க மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பா.ஜ., மறுக்கிறது. அதே நேரத்தில் கல்வியில் குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களுக்கு தாராளமாக நிதியை அளிக்கிறது. தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பா.ஜ., அரசின் திட்டம் இதுதானா? இதுபற்றி நம் தேச மக்களே முடிவெடுக்க வேண்டும் என விட்டுவிடுகிறேன்!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பதில்

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவிட்டதாவது: ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கது. தேசிய கல்விக்கொள்கைக்கு உங்கள் 'கொள்கை ரீதியான' எதிர்ப்பில் நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்:* தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா?* தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா?* தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?* தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, சமமான மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா?அப்படி இல்லாவிட்டால், அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Barakat Ali
செப் 10, 2024 18:33

கடிவாளம் ன்னா நோ .... கொள்ளு ன்னா வாயை திறப்பேன் ..... சூட்லர் ....


V RAMASWAMY
செப் 10, 2024 09:34

ஆதாயம் தேடுவது ஹான் தி மு கவின் தலையாய கொள்கை.


Svs Yaadum oore
செப் 09, 2024 22:32

இந்த விடியல் ஆட்சிக்கு வந்ததே தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றாளர்கள் தமிழ் தமிழன் தமிழன்டா என்ற சமூக நீதி போராளிகள் என்று பல போர்வையில் வந்த சீக்காளிகள்தான் .....இப்ப அந்த போராளிகள் எல்லாம் இப்பொது நடக்கும் இந்த கேவலமான ஆட்சியில் எங்குள்ளார்கள் என்று எவனாக்குவது தெரியுமா?? .....


அப்பாவி
செப் 09, 2024 21:08

சொன்னதை இந்தியிலே சொல்லுங்க பாப்பம்.


Kumar Kumzi
செப் 10, 2024 00:21

துண்டுசீட்டு இல்லாம ரெண்டு நிமிஷம் டுமீல்ல பேச சொல்லு பார்ப்போம்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 20:52

தமிழன் முன்னேறுவதை வந்தேறி ஓங்கோலன் விரும்பமாட்டான் .....


M Ramachandran
செப் 09, 2024 19:25

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களெ நீஙகள் இப்பட்டி திருத்தி கொள்ளுஙகள் கட்சியை சேரத்த குடும்பத்தை சேர்ந்த பிரமுகர்கள் பணம் பண்ணும் தொழிலை விட்டு மக்களுக்கா என்று கூர வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 09, 2024 18:23

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை கற்றுக் கொடுக்க மறுத்தால் திமுக அரசு நிதியை நிறுத்திவிட்டு பள்ளியை மூட வைத்து விடும். அதே போல மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை( பிஎம்ஸ்ரீ) ஏற்காவிட்டால் அவர்கள் நிதியை மறுக்கும் உரிமையுண்டு. மறுப்பார்கள்.


Kalyanaraman Andhukuru.R.
செப் 10, 2024 07:34

அதைத்தான் அவர் அரசியல் பண்ணாதீர்கள் என்று கூறுகிறார்.


Muralidharan S
செப் 09, 2024 17:56

தீயமுக உருவாக்கப்பட்டதே குடும்ப ஆதாயத்துக்குத்தான். எப்படி மக்கள் நலன், தேச நலன், தேசிய நலன் பற்றி சிந்திக்க முடியும் ? பொது மக்கள் நல்ல கல்வி அடையாமல் பார்த்துக்கொண்டால்தானே எங்களுக்கு ஒட்டு போடுவார்கள். படித்தவன், பண்பாளன், அறிவுடையவன் எவனாவது தீயமுகாவிற்கு ஒட்டு போடுவானா ?? அதனால்தான், தேசிய கல்வி கிடைக்க கூடாது என்று எதிர்க்கிறோம்.


xyzabc
செப் 09, 2024 22:47

படித்தவன் தி மு க வின் நன்மைக்காக வோட் போடுவது இல்லை .


C.SRIRAM
செப் 09, 2024 17:55

இதில் அரசியல் ஆதாயம் கூட இல்லை . மக்களை கூமுட்டைகளாகவே வைத்துக்கொள்ள முயலும் திராவிட மொள்ளைமாரித்தனம்.


Pandianpillai Pandi
செப் 09, 2024 17:49

என்னங்க கேள்வி? மாநில கல்வி முறையை எதிர்க்கீறீர்களா? மாநில மக்களின் உரிமையில் தலையிடுகீறீர்களா? மாநில ஆட்சி முறையை எதிர்க்கீறீர்களா? இதற்கு பதில் இல்லை என்றால் மாநில அரசின் கல்வி கொள்கை ஏற்றுக்கொள்ளுங்கள்.


புதிய வீடியோ