உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமலையை பின்பற்றும் அயோத்தி

திருமலையை பின்பற்றும் அயோத்தி

அயோத்தி: உ த்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடந்த காணிக்கை திருட்டு, நாடு முழுதும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோவில் விவகாரங்களை, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கவனிக்கிறது. காணிக்கை திருட்டை அடுத்து, அறக்கட்டளை நிர்வாகிகள் இருவர் பதவி விலகிவிட்டனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் எப்படி ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறாரோ, அதே போல அயோத்தி ராமர் கோவிலிலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7k7kvrml&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, இந்த தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன; 6,000 பேர் விண்ணப்பித்தனர். இதில், 16 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதிலிருந்து மூவர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஒருவர் ஐ.ஏ.எஸ்., இன்னொருவர் ஐ.பி.எஸ்., மூன்றாமவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இந்த அறக்கட்டளையில், 15 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் விரைவில் கூடி, இந்த மூவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் தான், ராமர் கோவிலின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார். இதில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த காணிக்கை திருட்டு விவகாரம் குறித்து காங்., உட்பட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் குரல் எழுப்பினாலும், அயோத்தியில் வாய் மூடி மவுனமாக உள்ளனர். காரணம், இந்த திருட்டில் பா.ஜ.,வுடன், சமாஜ்வாதி கட்சியும் சம்பந்தப்பட்டுள்ளது என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி வருகிறார். இன்னொரு பக்கம், அடுத்தாண்டு உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அயோத்தியில் இது குறித்து எந்த ஒரு கட்சியும் விவாதிக்க தயாராக இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஜெகதீசன்
ஆக 16, 2026 14:27

ஆக, கோவில்களை ஆன்மிக மக்கள் குழு நிர்வகிக்க முடியாது, நிர்வாக அதிகாரி தேவை என்ற யதார்த்தம் புரிந்து விட்டது போல. கோவில்களை அரசு நிர்வாகத்திடமிருந்து மீட்கனும் எனும் குரல் அவ்வப்போது இங்கு வருகிறது, அரசு இந்து விரோதமாக செயல்பட கூடாது என்பதற்கு தான் போராடனும்.


GV Ganesan
ஆக 16, 2026 10:31

திருப்பதியும் அதே போல தானே


அப்பாவி
ஆக 16, 2026 09:26

ஒரு அதிகாரியால் மாற்றம் வராது. கடைசி நிலை ஊழியர் வரை திருந்தணும். எல்லோருக்கும் மினிமம் ஒரு லட்ஷ ரூபாய் சம்பளம், கார், பங்களா குடுக்கணும். செய்விங்களா?


Kasimani Baskaran
ஆக 16, 2026 06:51

தமிழக கோவில்களில் இருந்து இரண்டு டன் தங்கத்தை அபேஸ் செய்த திராவிடக் கோஷ்டி மீது கேள்வி கேட்காமல் இது போன்ற விஷயங்களை அதிக முக்கியத்துடன் அணுகுவது நேர்மை நமக்கல்ல என்பது போல இருக்கிறது. ஞாயமான விசாரணை நடப்பது நிச்சயம் - ஏனென்றால் அங்கு யோகியின் ஆட்சி நடக்கிறது.


Seekayyes
ஆக 16, 2026 06:14

எல்லாம் கூட்டு களவாணிகள் என்பதை மறுப்பதற்கில்லை.


விருமாண்டி
ஆக 16, 2026 04:36

ராமருக்கே லட்டு கொடுத்த செய்தி ஏற்கனவே வந்திடுச்சே.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 16, 2026 08:09

அமைதி கும்பல் இனி வெளி நாட்டு பணம் வராதாம், சோகம்


விருமாண்டி
ஆக 17, 2026 05:32

ட்ரம்ப்புக்கு பயந்து அந்த மசோதாவை யாரும் கேக்காமலேயே பார்லிமெண்ட் குழு விசாரிக்கும் என்று அந்தர்பல்டி அடிச்சிட்டாரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை