உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீபாவளியாக கொண்டாட தயாராகும் மக்கள்! அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

தீபாவளியாக கொண்டாட தயாராகும் மக்கள்! அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான, கடவுள் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமாண்ட கோவிலை, வரும் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.இந்த நிகழ்வு நாட்டில் உள்ள, 140 கோடி பேருக்கும் மற்றொரு தீபாவளியாக இருக்கும்என்பதில் சந்தேகமே இல்லை. மொத்தம், 70 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பிரமாண்ட கோவில், கோடிக்கணக்கான பக்தர்களின் வெற்றியாகவும், பல நுாற்றாண்டுகளின் பக்தி மற்றும் தியாகத்தின் சான்றாகவும், ஆன்மிக முக்கியத்துவத்தின் கலங்கரை விளக்கமாகவும் விளங்கும்.அசுர வேதம் குறிப்பிட்டுள்ளபடி, கடந்த ஐந்து நுாற்றாண்டுகளில், கடவுள்களின் நகரமான அயோத்தி போர், கலவரம், சர்ச்சைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கப்படாமல், காலத்தின் சோதனையாக நிற்கிறது.அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நெருங்கி வருவதால், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை, பிரதமர் நரேந்திர மோடியின்முன்னாள் முதன்மை செயலரும், ஸ்ரீராமர் கோவில் கட்டுமான குழு தலைவருமான நிருபேந்திர மிஸ்ரா உன்னிப்பாக கவனிக்கிறார். மேலும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும்அவரது அரசும் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சனாதனத்தின் அடையாளம்

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு, 2020 ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய சனாதன கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படும் இக்கோவில், 2025ம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும்.அயோத்திக்கு தற்போது, 2.5 கோடி சுற்றுலா பயணியர் வரும் நிலையில், கோவில் திறப்புக்கு பின், இந்த எண்ணிக்கை 25 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.கடந்த தீபாவளி அன்று, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், 'மகர சங்கராந்தி மற்றும் ஜன., 22ம் தேதி கோவில் திறப்புக்கு பின், கோவில் நகரமான அயோத்திக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, 10 மடங்கு அதிகரிக்கும்' என்றார்.

பொறியியல் அற்புதம்

ராமர் கோவில் கட்டுமானம் அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, கடவுள் மீது பக்தர்கள் வைத்த நம்பிக்கை மற்றும் பொறியாளர்கள் அவர்களது திறமை மீது வைத்த அபிமானத்தை வெளிப்படுத்துகிறது. ராமர் கோவிலின் அசல் வடிவமைப்பு, 1988ம் ஆண்டில், குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த, சோம்புரா குடும்பத்தால் வடிவமைக்கப்பட்டது.குஜராத்தின் சோம்நாத் கோவில் உட்பட, உலகளவில், 100க்கும் மேற்பட்ட கோவில்களை வடிவமைப்பதில், 15 தலைமுறைகளாக இக்குடும்பத்தினர் பங்களித்துள்ளனர். ராமர் கோவிலின் தலைமை கட்டடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா. இவரது இரு மகன்களான நிகில் சோம்புரா, ஆஷிஷ் சோம்புரா அவருக்கு உதவியாக இருக்கின்றனர். அவர்களும் கட்டடக் கலைஞர்களே.

ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவின் பொதுச்செயலர் சம்பத் ராய் கூறியதாவது:

கோவிலின் அஸ்திவாரத்திற்காக மண் பரிசோதனை செய்த போது, மணல் இல்லை என்பதும், அங்கு துாய தளர்வான மணல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த மணல், அஸ்திவாரம் கட்டுவதற்கு பொருத்தமற்றது என அறிவிக்கப்பட்டது.இந்த கட்டுமானப் பகுதிக்கு அருகே, பல நுாற்றாண்டுகளாக சரயு நதி ஓடியதால் மணல் தளர்வாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புதுடில்லி, குவஹாத்தி, சென்னை மற்றும் மும்பை ஐ.ஐ.டி.,களின் வல்லுனர்கள் உதவி கோரப்பட்டது. மேலும், மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் உதவியும் நாடப்பட்டது.அவர்கள் தந்த ஆலோசனைப்படி, கட்டுமான இடத்தில், 6 ஏக்கரில், 14 மீட்டர் வரை மணல் அகற்றப்பட்டது. இதன் பின், அந்தப் பகுதி ஒரு கடல் போல காட்சி அளித்தது. மணல் அகற்றப்பட்ட பகுதிகளில், அஸ்திவாரத்திற்கு பாறைகளை தயார் செய்ய, 'ரோல்டு காம்பாக்டட் கான்கிரீட்' எனப்படும் விசேஷ கான்கிரீட் கலவை, 56 அடுக்குகளால் நிரப்பப்பட்டது. இரும்புத் துண்டு இல்லாத இந்த சிறப்பு கான்கிரீட், அடித்தளத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.கோவிலின் எஞ்சிய பகுதி, ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட இளஞ்சிவப்பு மணற்கற்களால் ஆனது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து எடுத்து வரப்பட்ட கிரானைட், 21 அடி உயர பீடத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.நாகரா கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட ராமர் கோவில், ராமேஸ்வரம், திருப்பதி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற தென்னிந்திய கோவில்களின் அம்சங்களை உள்ளடக்கியது.

கோவிலின் வடிவமைப்பு

மற்றும் கட்டுமான மேலாளர் கிரிஷ் சஹஸ்ரபோஜினி கூறியதாவது:

தமிழக தச்சர்கள்

இக்கோவிலில், 392 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 கதவுகள் வழியாக இக்கோவிலுக்குள் செல்ல முடியும். இதில், 14 கதவுகள் தங்கத்தாலானவை. ராஜஸ்தான், ம.பி.,யில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து மரம்; தெலுங்கானாவில் இருந்து எடுத்து வரப்பட்ட கிரானைட் கற்களை தமிழகத்தைச் சேர்ந்த தச்சர்கள்வடிவமைத்துள்ளனர்.மேலும், கர்நாடகாவில் இருந்து கிரானைட் தொழிலாளர்கள், ராஜஸ்தானில் இருந்து சிலை செதுக்குபவர்கள் மற்றும் ஒடிசாவில் இருந்து மணற் கல் செதுக்குபவர்கள் வாயிலாக, கிரானைட் கற்கள் உருளை வடிவில் வடிவமைக்கப்பட்டன.ராமர் கோவிலில், இரு வெவ்வேறு சிலைகள் அமைக்கப்பட உள்ளன. கடவுள் ராமரின் குழந்தை சிலை தரைத்தளத்திலும், முதல் தளத்தில் கடவுள் ராமரின் இளம் வயது சிலையும் வைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மொத்தம், 732 மீட்டர் நீளமும், 14 அடி அகலமும் கொண்ட கோவிலை சுற்றி வரும் வட்டப்பாதை அமைந்துள்ளது. இது, வட மாநிலங்களில் உள்ள கோவில்களிலேயே அதிகம். பிரதான சன்னிதியைத் தவிர, இரண்டு மாடிகள் மற்றும் 14 அடி அகலமுள்ள சுற்றுப்பாதையின் நான்கு மூலைகளிலும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.இவற்றில், ராமாயணத்தை சித்தரிக்கும், 125 வெண்கல சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. சூரியன், மா பகவதி, கணபதி, சிவன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களும் இதில் அடங்கும். வடக்கு பக்கத்தில் அன்னபூரணி, ஹனுமன் ஆகியோருக்கு கோவில்கள் உள்ளன.கோவிலின் தெற்கு பகுதியில், கடவுள் ராமருடன் தொடர்புடைய, -வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், தென் மாநிலங்களில் அகத்திய முனிவரின் கோவில்களும் உள்ளன.மேலும், கங்கையைக் கடக்க ராமருக்கு உதவிய படகோட்டி நிஷாத்ராஜ், ராமர் மற்றும் அஹல்யா தேவிக்கு பழங்களை வழங்கிய, பழங்குடி துறவி ஷப்ரி ஆகியோரின் கோவில்களும் இடம்பெற்றுள்ளன.நாட்டை இணைக்கும் சீதையை இலங்கை அரசன் ராவணன் கடத்திய போது, அவருடன் சண்டையிட்ட பறவை ஜடாயுவின் சிலையும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.கடந்த இரு ஆண்டுகளாக, பிரதமர் மோடி உரையாற்றிய காசி- தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளின் வாயிலாக, கலாசார ஒற்றுமையை உயர்த்தி, ஒருங்கிணைப்பை வளர்ப்பதன் மூலம், வடக்கையும், தெற்கையும் இணைக்கும், பா.ஜ.,வின் சமீபத்திய முயற்சியே, கோவிலின் கட்டடக் கலை ஆகும்.கிரிஷ் சஹஸ்ரபோஜினி மேலும் கூறியதாவது:எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், ராமர் கோவிலை கட்டி உள்ளோம். பரந்து விரிந்த, 70 ஏக்கர் நிலத்தில், 600க்கும் மேற்பட்ட செடிகள் வளர்க்கப்படும். இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், நேரடி மின் இணைப்பு ஆகியவற்றுடன், இக்கோவில் தன்னிறைவு பெறுகிறது. 100 கழிப்பறைகள், 25,000 பேரை கையாளக்கூடிய மையம்மற்றும் சுகாதார மையமும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
ஜன 02, 2024 06:35

ஹிந்துக்களுக்கு மதப்பற்று வேண்டும், அதிகமாக மதநம்பிக்கை வேண்டும், மதமாற்றம் தடை செய்யப்படவேண்டும், மற்ற மதத்தை சார்ந்தவர்கள் ஹிந்து மதத்தைப் பழித்து பேசுவதை அனுமதிக்க கூடாது இது எல்லாம் சரி தான், ஏற்றுக் கொள்ள கூடியது தான், ஆனால் இதெல்லாம் நடக்க பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்பதை மட்டும் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!


Ramesh Sargam
ஜன 02, 2024 00:35

"ராமர், ஹிந்துக்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. அவர் ஒட்டுமொத்த உலகத்திற்குமானவர்". இப்படி சொன்னது யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீர்கள், ஆம், ஹிந்து விரோதி, பரூக் அப்துல்லா அவர்கள். இதுவே நம் ஹிந்து தர்மத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இனி இவரைப்போன்று ஹிந்து தர்மத்தை எதிர்க்கும், ஏளனமாக பேசும் பலர் ஹிந்து தர்மத்தை பற்றி அறிந்து, அந்த தர்மத்தின் வழி நடக்க வருவார்கள் என நம்புகிறேன். ஜெய் ஸ்ரீ ராம்.


g.s,rajan
ஜன 01, 2024 19:37

முதலில் இந்தியாவில் இந்துக்களிடம் ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் ,அதற்ககு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிரிவினைகளை ஏற்படுத்தி சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டு செய்யும் முறைகளை படிப்படியாக நிறுத்தி பிறகு ஜாதிகளை ஒழிக்க வேண்டும்.....


திகழ்ஓவியன்
ஜன 01, 2024 20:54

சொல்லுகிறார்கள் கொடி பிடிக்க அடியாள் வேலை செய்ய என்றால் நீயும் நானும் ஒரே HINDHU , கோயில் க்கு அர்ச்சகர் என்றால் நீ வேறு ஹிந்து இது தான் உங்கள் ஊரில் ஹிந்துத்துவா நிலை , ஐயர் அய்யங்கார் வடகலை தென்கலை இதை முதலில் 3 % கூட்டத்திடம் ஓழிக்க பாருங்கள்


Velan Iyengaar
ஜன 01, 2024 22:31

ரெண்டு கருத்துக்களையும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் ஆனால் நடைமுறையில் பாகுபாடுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய ஒரு கும்பல் உளவியல் ரீதியாக மக்கள் மனதை அதிகாரம் செலுத்தும் வகையில் நடைமுறைகளை நடத்திக்கொண்டு அதை உயிர்ப்புடன் வைத்திருக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை வினாடி பிசகாமல் நடைமுறைப்படுத்துவதில் ஏகத்துவம் பெற்று இருக்கும் கும்பலிடம் இருந்து மக்களை காப்பாற்ற எதாவது ஒரு அதிசயம் நடந்தாலன்றி வேறு வழி புலப்படவில்லை பெரியாரை விட மிக திக வீர்யம் மிக்க இன்னொரு தலைமை நம் நாட்டுக்கு கிடைக்க எல்லாம் வல்ல சக்தியிடம் வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.. இந்த பத்திரிகையை எடுத்திக்கொள்ளுங்கள்... அப்பட்டமாகா அநியாயமாக நடந்துகொள்கிறார்கள்... அந்த இறைவன் இவர்களை தண்டிக்க என்ன செய்கிறான்???


Sivak
ஜன 01, 2024 22:54

அர்ச்சகர் என்ன கலெக்டர் வேலையா ? நீ திருட்டு ஓவியா அதை புடிச்சு தொங்கிட்டு இருக்கே ... கலெக்டர்.. உன்னைய வேலை செய்ய சொன்னா நீ வேற ஹிந்து நா வேற ஹிந்து ன்னு சொல்லுவியா ... கலெக்டர் வேலையை ஒழிக்கணும்னு நெனைப்பியா? அதே மாதிரி எல்லா வேலையும் யோசிச்சு பாரு பாப்போம் .... உன்னை மாதிரி திருட்டு கும்பல் பாப்பானுக்கு வேணாம் இந்துக்களுக்கு என்னைக்கு கொடி பிடிச்சிருக்க இல்ல அடியாள் வேலை பார்த்திருக்க ??? அய்யர் அய்யங்கார் வடகலை எதுவா இருந்தா உனக்கு என்ன .... குடிநீர் தொட்டில மலத்தை கலந்தான் பாரு அவன் என்ன ஜாதின்னு பாரு ...


Kasimani Baskaran
ஜன 02, 2024 00:48

ஜாதி வெறி என்பது தண்டனைக்குரிய குற்றம். ஒழிப்போம் கிழிப்போம் என்று உருட்டினால் உள்ளே போக வேண்டியது கூட வரலாம்..


Sivak
ஜன 01, 2024 18:37

ஜெய் ஸ்ரீ ராம் ... ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் மொத்த இந்துக்கள் ஓன்றிணைந்து விடுவார்கள் ..... அந்த நன்னாள் வர போகிறது ... இந்துக்கள் ஒற்றுமையாகிவிட்டால் கேவலமான எண்ணம் கொண்டர்வகள் தலையில் இடி விழும் நாள். ஜெய் ஸ்ரீ ராம்.


திகழ்ஓவியன்
ஜன 01, 2024 19:23

இடிக்க உடைக்க ஹிந்து தேவை , கோயில் க்குள் என்றால் மக்கள் யாரும் அயோத்திய வரவேண்டாம் , அட்வானிக்கே ஆப்பு


A. Muthu
ஜன 01, 2024 18:08

ஜெய் ஸ்ரீ ராம் ...


vbs manian
ஜன 01, 2024 18:02

சந்தேகமே இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை வீசும் வசந்த பூங்காற்று ராமபிரான்.எல்லோருக்கும் எல்லாமும் நிஜமாகவே கிடைக்கும் ராமராஜ்யம் உருவாகட்டும். பிரார்த்திப்போம்.ஊழல் வஞ்சக போர்வையில் உலாவும் இன்றைய அசுரர்களிடமிருந்து இந்தியா விடுதலை அடையட்டும்.


Seshan Thirumaliruncholai
ஜன 01, 2024 17:57

நல்ல காரியம் தொடங்குவதற்கு முன் விஸ்வசேனர் ஆராதனை செய்வர் விக்னம் ஏற்படாமல் இருக்க. கண் திருஷ்டி என்பதனை பெருபான்மை மக்கள் நம்புவர்கள். ஒவ்வொருவரும் செய்வது நல்லது.


Srprd
ஜன 01, 2024 15:12

Sri Rama Jayam Jai Hanuman


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 01, 2024 11:21

2026-ல் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கண்டிப்பாக இறைவனின் அருளால் ஒருமுறையேனும் அயோத்தி சென்று ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை தரிசிக்க வேண்டும்.


Senthoora
ஜன 01, 2024 10:13

எல்லோருக்கும் புத்தாண்டு நல்லாசிகளுடன் வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை