நீதிமன்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தவருக்கு ஜாமின்
புதுடில்லி:நீதிமன்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்தவரை, ஜாமினில் விட கோர்ட் நேற்று உத்தரவிட்டது.விஷால் குமார் என்பவர், பல ஆண்டுகளாக, கோர்ட் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து, சிறையில் இருந்த சிலருக்கு சலுகைகள் வழங்கியதாக, கைது செய்யப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமின் கோரி விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த சிறப்பு நீதிபதி தீபாலி சர்மா நேற்று பிறப்பித்த உத்தரவு:விஷால் சர்மா செய்த குற்றத்திற்கு தண்டனையாக எத்தனை காலம் சிறையில் இருக்க வேண்டுமோ அதை விட அதிக காலம் சிறையில் இருந்து விட்டார். அவர் மீதான குற்றங்கள் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவர் ஜாமினில் விட தகுதியானவர்.மேலும், போலீஸ் விசாரணைக்கு இதுவரை ஆஜராகி வந்துள்ள அவர், போலீசுடன் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எனவே, அவருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.