உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராம்தேவின் உதவியாளர் விரைவில் கைது

ராம்தேவின் உதவியாளர் விரைவில் கைது

புதுடில்லி : பாஸ்போர்ட் பெறுவதற்கு தவறான ஆவணங்களை சமர்ப்பித்த வழக்கில், யோகா குரு பாபா ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணாவை நாளை கைது செய்ய சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, நாளை ஆஜராகுமாறு, ஹரித்வாரில் உள்ள அவரது வீட்டு முகவரிக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனிற்கு, பாலகிருஷ்ணா தரப்பில் இதுவரை எந்த பதிலும் தரப்படவில்லை. கடந்த 3 நாட்களுக்கு மேலாக அவர் காணவில்லை என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது. இதனையடுத்து, நாளை அவர் சி.பி.ஐ., முன் ஆஜராகாதபட்சத்தில், அவரை சி.பி.ஐ. கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ