உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பாக்., வான் பரப்பை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை நீட்டிப்பு

 பாக்., வான் பரப்பை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய விமானங்கள், தங்கள் வான் பரப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மே 24 வரை நீட்டிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்., 24ம் தேதி முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க அந்நாடு தடை விதித்தது. பதிலுக்கு, பாக்., விமானங்கள் நம் வான்பரப்பை பயன்படுத்த மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்., 30ல் தடை விதித்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் சார்பில் விமான பணியாளர்களுக்காக நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய விமானங்கள் மற்றும் இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதி இல்லை. இந்த தடை, வரும் மே 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வெளி தடை அமலுக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இதன் விளைவாக, இந்திய விமான நிறுவனங்கள் பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு செல்ல நீண்ட வழித்தடங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தான் விமானங்கள் நம் வான்வெளியைப் பயன்படுத்த, வரும் 24ம் தேதி காலை 05:30 மணி வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது; இந்தத் தடையும் மேலும் நீட்டிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !