வாசகர்கள் கருத்துகள் ( 2 )
how can be that a waste? Players will spend it. BCCI generates income from these players ansd shares it with players in many ways. Do not worry.
waste
மும்பை: துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசை பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி கடந்த மார்ச் 9ம் தேதி துபாயில் நடந்தது. இதில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாடின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i0yg6uts&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறப்பாக விளையாடி இந்திய அணி 4 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தொடர் நாயகன் விருது நியூ., அணியின் ரச்சின் ரவீந்திராவிற்கும், போட்டியின் ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவிற்கும் வழங்கப்பட்டது.2002ம் ஆண்டு நடிந்த இந்தியா, இலங்கைக்கு சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொடுத்தாலும், தோனிக்குப் பிறகு கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். வெற்றிக்கோப்பையுடன், ரூ. 20 கோடி பரிசுடன் இந்திய அணி தாயகம் திரும்பியது.இந்த நிலையில், ரூ.58 கோடி பரிசுத்தொகையை சாம்பியன் டிராபி தொடரை வென்ற அணியில் இடம்பிடித்த இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொகை போட்டியில் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், பிற அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
how can be that a waste? Players will spend it. BCCI generates income from these players ansd shares it with players in many ways. Do not worry.
waste