உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீவிரமடையும் பாரத மாதா சர்ச்சை; பா.ஜ., - இடதுசாரி மாணவர்கள் மோதல்

தீவிரமடையும் பாரத மாதா சர்ச்சை; பா.ஜ., - இடதுசாரி மாணவர்கள் மோதல்

திருவனந்தபுரம்: கேரளாவில், கவர்னர் விழாவில் வைக்கப்பட்ட பாரத மாதா படம் சர்ச்சையை எழுப்பியதை அடுத்து, பா.ஜ., மற்றும் இடதுசாரியினர் பல்வேறு இடங்களில் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளார்.கவர்னர் மாளிகையில், கடந்த 4ம் தேதி நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், காவி கொடி ஏந்திய பாரத மாதா படம் வைக்கப்பட்டு இருந்தது. இதனால், நிகழ்ச்சியில் கேரள வேளாண் அமைச்சர் பிரசாத் பங்கேற்கவில்லை.இந்த சூழலில், கவர்னர் மாளிகையில் சமீபத்தில் நடந்த சாரண - சாரணியர் விழாவிலும், சர்ச்சைக்குரிய வகையில் பாரத மாதா படம் மீண்டும் வைக்கப்பட்டு இருந்தது. இதனால், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அமைச்சர் சிவன்குட்டி வெளியேறினார். இதையடுத்து, கவர்னருக்கு எதிராக இ.கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தேசாபிமானி, 'கவர்னர் மாளிகை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தின் கிளை அல்ல' என, விமர்சித்துள்ளது. இந்திய மாணவர் கூட்டமைப்பு, இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகளும் கவர்னருக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளன. கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னரை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பா.ஜ.,வினர், அமைச்சர் சிவன்குட்டிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர்.அவரது உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர். இதை தடுத்த இந்திய மாணவர் சங்கத்தினர், அவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. இதேபோல், பல இடங்களிலும் மாணவர் அமைப்பினர் மற்றும் பா.ஜ., இடையே மோதல் வெடித்தது. பாரத மாதா பட விவகாரத்தில் கவர்னர் அரசியலமைப்பு விதிகளை மீறியதாக கூறிய காங்கிரஸ், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கவர்னர் மற்றும் மாநில அரசு இடையே சுமுகமான சூழல் நிலவிய நிலையில், பாரத மாதா விவகாரம், கேரள அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

visu
ஜூன் 22, 2025 12:12

பாரத மாத படம் வைக்க கூடாது என்று எந்த சட்டம் உள்ளது


V.Mohan
ஜூன் 22, 2025 08:09

ஒரிஜினலாக இந்திய தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் போன்ற சட்ட மேதைகளால் சேர்க்கப்படாத "மதச்சார்பின்மை" என்கிற விஷயத்தை சப்டத்திற்கு புறம்பாக திருட்டுத்தனமாக காங்கிரஸ் சர்வாதிகாரி இந்திரா பெரோஸ்கான் காந்தி 1975ல் அரசியலமைப்பு சட்டத்தில் நுழைத்தது முதல் பாரத தேசத்தில் நியாயமற்ற அதிகார போதை பிடித்த இடதுசாரிகள் எல்லா அதிகார மையங்களையும் பிடித்துக் கொண்டனர். படித்தவர்கள் என்ற போர்வையில் இடதுசாரிகள் முஸ்லீம் பெரும்பான்மை உள்ள காங்கிரஸை அவர்கள் பாதைக்கு திருப்பி விட்டனர். போதாக்குறைக்கு மேற்கு வங்கமும், கேரளாவும் அறிவாளிகள் என்ற போர்வையில் மக்களை மூளைசலவை செய்து நமது சனாதனதர்மத்தை மட்டும் வஞ்சிக்கின்றனர். சிறுபான்மையினர் என்ற பெயரில் முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் ஓட்டுக்களை பெற்று அடிமை சேவகம் செய்கின்றனர். "மதச்சார்பின்மை" என்று அதற்கு பெயர். இந்தியாவில் படையெடுப்புகள் வாயிலாக நூற்றாண்டுகள் முன்பே வந்து ஆட்சியும் புரிந்த இந்த இரண்டு மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் சேர்ந்தே தான் 1947 ல் சுதந்திரம் வந்தது. சும்மா ஓட்டுக்களுக்காக சிறுபான்மை மதச் சார்பின்மை என்று உருட்டிக் கொண்டுள்ள கட்சிகள் மனதில் ஈரமற்ற இந்த இடதுசாரிகள் ஒளிந்திருப்பது கம்யூனிஸ்டுகள் மற்றும் புது புது பெயர்கள் கொண்ட காங்கிரஸின் கிளை கட்சிகள், திராவிட என்ற பிரிவினை வாத பெயர் கொண்ட கட்சிகள் ஆகியவற்றில் தான். இவர்களை மிக படித்தவர்களாக உள்ள மேற்கு வங்காள மக்களும், கேரள மக்களும் இன்னும் நம்புவது விதியின் கொடுமை


V RAMASWAMY
ஜூன் 22, 2025 07:10

தாய் நாட்டை அன்னையாக வணங்கத்தெரியாத வணங்க மறுக்கும் மாநிலங்களில் கவர்னர் ஆட்சி கொண்டுவந்தாலென்ன?


Svs Yaadum oore
ஜூன் 22, 2025 07:10

இந்த கேரளா மலையாளிகள் ஓர்மாச்சுவடுகல் சீசன் 2 கல்லூரிகளுக்கு இடையே நடனப் போட்டி என்று மே மாதம் துபாயில் நடத்தியுள்ளார்கள். அது நடத்திய இடம் பாக்கிஸ்தான் அசோஸியேஷன் அரங்கம் ....அங்கு இந்த மலையாளிகள் கலாச்சார விழா என்று நடத்தி அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் குல் அப்ரிடி அன்புடன் உற்சாக வரவேற்பாம் ......இந்த மண்ணின் உப்பை தின்று இந்த மண்ணுக்கே துரோகம் செய்யும் மானங்கெட்ட கூட்டம் ..


Svs Yaadum oore
ஜூன் 22, 2025 06:55

கவர்னர் விழாவில் வைக்கப்பட்ட பாரத மாதா படம் வைத்தால் இந்த உண்டியல்களுக்கு ஏன் எரியனும் ??....நிகழ்ச்சியில் பங்கேற்காமல் கேரள வேளாண் அமைச்சர் வெளியேறினாராம் .......இந்த அமைச்சனுக்கு பாரதம் பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் செல்லட்டும் ....இந்த நாட்டின் பெயர் பாரதம் , பாரத நாடு , பாரத வர்ஷா ....இது பிடிக்காதவனுங்க விடியல் திராவிடனுங்க அவர்களுக்கு ரொம்ப பிடித்த ஆப்கானிஸ்தான் போகலாம் ....


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 06:36

படிப்பறிவு இருந்திருந்தா கேரளத்தின் இதே சிவன்குட்டி முஸ்லீம் ,கிருஸ்துவ நிகழ்ச்சிகளையும் புறக்கணித்திருக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கணும் , அப்போ பிணம்தின்னி விசயன் என்ன சொல்லியிருப்பான்


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 06:32

ஜனநாயக நாட்டில் பொது உடமை என்ற மொள்ளமாரித்தனம் தேவையில்லாதது. ஆகவே கம்மிகளின் சொத்துக்களை பிடுங்கி அவர்களை சீனாவுக்கோ அல்லது வியட்நாம் போன்ற கம்முனிச ஆட்சி நடக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.


Iyer
ஜூன் 22, 2025 05:28

மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக கேரளா ஒரு மினி பாக்கிஸ்தான் ஆகிவிட்டது. யோகி போன்ற ஒரு முதல்வர் கேரளாவில் தேவை.


Rajah
ஜூன் 22, 2025 08:01

மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக கேரளா, தமிழ்நாடு ஒரு மினி பாக்கிஸ்தான் ஆகிவிட்டது என்று சொல்லுங்கள்.


முக்கிய வீடியோ